'தி லெஜண்ட்' திரைப்படத்தை இந்தியில் ரிலீஸ் செய்யும் பிரபலம் இவர் தான்!

பிரபல தொழிலதிபர் அருள் சரவணன் நடிக்கும் ‘தி லெஜண்ட்’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தை தமிழில் கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் ரிலீஸ் செய்யவுள்ள நிலையில் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யும் பிரபலங்கள் குறித்த தகவல்களை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன்னர் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை ஹிந்தியில் கணேஷ் பிலிம்ஸ் நம்பிராஜன் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரெளட்டாலா, விஜயகுமார், பிரபு, விவேக், சுமன், நாசர், லிவிங்ஸ்டர்ன், யோகிபாபு, ரோபோ சங்க உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.