close
Choose your channels

இபிஎஸ் தலைமையிலான அதிமுக அரசின் சாதனைப் பட்டியல்… அனைத்துத் துறைகளிலும் முதலிடம்!!!

Saturday, January 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இபிஎஸ் தலைமையிலான அதிமுக அரசின் சாதனைப் பட்டியல்… அனைத்துத் துறைகளிலும் முதலிடம்!!!

 

கொரோனா காலத்திலும் பல்வேறு சிக்கல்களை கடந்து தமிழக அரசு வெற்றிகரமான ஆட்சியை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் நடைமுறைப் படுத்தி இருக்கும் சிறப்பான திட்டங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இத்திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலன் சார்ந்தவையாக இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதில் முதலாவாதாக மருத்துவம் பயிலுவதற்கான நீட் தேர்வில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5% உள்இட ஒதுக்கீடு கொண்டு வந்தது. அதோடு 52.31 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா இலவச மடிக்கணினி வழங்கியது. இந்தியாவிலேயே சிறந்த காவல் துறையை நிர்வகிப்பது. தாலிக்கு தங்கம் வழங்கம் திட்டத்தின் கீழ் 12.5 லட்சம் பயனாளிகளுக்கு உதவியது. 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் 90.73 லட்சம் குடும்பங்களுக்கு வருமானத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

மேலும் ஏழை, எளிய மக்கள் பசியாறுவதற்காக அம்மா உணவங்களை தமிழக முழுவதும் அமைத்துக் கொடுத்தது. அதிலும் கொரோனா நேரத்தில் இந்த உணவகங்களை மேலும் சீர்ப்படுத்தியது. அம்மா ஸ்கூட்டர் திட்டத்தின் கீழ் 2.8 லட்சம் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு மானியத்தை வழங்கியது. இரயில், பஸ் போன்ற அனைத்துப் போக்குரவத்து இடங்களிலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி இடவசதியை ஏற்படுத்திக் கொடுத்தது.

தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக சீர்ப்படுத்தியது. கர்ப்பிணி தாய்மார்களின் மருத்துவத்திற்காக உதவும் வகையில் 18 ஆயிரம் பேருக்கு ரூ.67.09 லட்சம் பணம் வழங்கியது. 60 வயதைத் தாண்டிய 33.07 லட்சம் மூத்த குடிமக்களுக்கு மாதம் தோறும் ரூபாய். 1000 உதவித் தொகை வழங்கியது. ஊரகப்பகுதிகளில் செயல்பட்டு வரும் சுய உதவிக்குழுக்கள் சார்ந்த 26,02,433 மகளிருக்கு ரூபாய் 79,69940 கோடி கடன் வழங்கியது. கொரோனா காலத்திலும் தமிழகத்தை முதலீட்டில் நம்பர் ஒன் ஆக்கியது. தொடர்ந்து 3 முறை இந்தியா டுடே வழங்கும் சிறப்பு விருது பட்டியலில் தமிழகம் முதல் இடத்தைப் பெறச்செய்தது.

17 லட்சம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி வழங்கியது. தமிழகத்தில்  30 ஆண்டுகளில் இல்லாத மகசூலைப் பெற விவசாயிகளுக்கு உதவியது. ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்காவை கொண்ட மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்தியது. நெசவாளர்களுக்கு கட்டணம் இல்லாத மின்சாரத்தை வழங்கியது. கடிமராமத்து திட்டத்தின்மூலம் 5,586 நீர்நிலைகளை சரிசெய்து மீட்டது. நீர் மேலாண்டையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியது.

டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக அறிவித்தது. 50 வருட காவிரி பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு கண்டது. உணவு தானிய உற்பத்தியில் 5 முறை மத்திய அரசின் விருதை தமிழகம் வென்றது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது. இதனால் தமிழகத்தில் மிகச் சிறப்பான ஆட்சி நடைபெறவும் முதல்வர் காரணக் கர்த்தாவாக அமைந்து இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.