தளபதி விஜய்யின் 'மெர்சல்' டீசர் எப்போது? புதிய தகவல்

  • IndiaGlitz, [Saturday,September 16 2017]

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக உள்ளது. வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் இந்த படத்தின் டீசருக்காக விஜய்யின் கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் 'மெர்சல்' டீசர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அனேகமாக இந்த படத்தின் இயக்குனர் அட்லியின் பிறந்த நாளான செப்டம்பர் 21ஆம் தேதி 'மெர்சல்' டீசர் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தல அஜித்தின் 'விவேகம்' திரைப்படத்தின் டீசர் உலக அளவில் அதிக லைக்குகள் பெற்ற படம் என்ற உலக சாதனையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், 'மெர்சல்' டீசர் இந்த சாதனையை முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

காணாமல் போன நடிகையின் சகோதரர் மகள் வீடு திரும்பினார்

நடிகைகள் டிஸ்கோ சாந்தி, லலிதாகுமாரி ஆகியோர்களின் சகோதரர் மகள் அபிர்ணா சமீபத்தில் காணாமல் போனார் என்பதும், அவரை காவல்துறையினர் உதவியுடன் குடும்பத்தினர் தேடி வந்தனர் என்பதும் அனைவரும் அறிந்ததே.

தெலுங்கை அடுத்து கன்னடத்திலும் ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் தமிழ் படம்

விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குனர் சசி இயக்கிய 'பிச்சைக்காரன்' திரைப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் சூப்பர் ஹிட் ஆகியது.

இளம் தம்பதியரின் கனவை நனவாக்குவாரா லட்சுமிராமகிருஷ்ணன்?

குணசித்திர நடிகையான லட்சுமிராமகிருஷ்ணன் ஏற்கனவே 'ஆரோகணம்', 'நெருங்கி வா முத்தமிடாதே' ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது அவர் அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார். 

இசையமைப்பாளர் அவதாரத்தில் பிரபல பாடகர்

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர் நடிகர் ஆவதும், நடிகர் இசையமைப்பாளர் ஆவது, ஒளிப்பதிவாளர் இயக்குனர் ஆவதும் இயக்குனர் தயாரிப்பாளர் ஆவதுமான நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கின்றது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் 'காலா': அடுத்தது அரசியல் களமா?

ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு இடையில் சில நாட்கள் ஃபெப்சி வேலைநிறுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.