விஜய்சேதுபதியின் 'மாமனிதன்' புதிய அப்டேட்

  • IndiaGlitz, [Sunday,April 21 2019]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த 'மாமனிதன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே முடிந்தவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த படத்தின் டப்பிங் பணிகள் நேற்று தொடங்கியுள்ளது.

விஜய்சேதுபதி தனது பகுதிக்கான டப்பிங்கை நேற்று பேசத்தொடங்கினார். விஜய்சேதுபதியின் டப்பிங் பணி முடிவடைந்ததும் இந்த படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர், நடிகைகளின் டப்பிங் தொடங்கப்படவுள்ளது.

சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக காயத்ரி மீண்டும் நடித்துள்ளார். மேலும் லலிதா, குருசோமசுந்தரம் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜாவும் அவருடைய இசை வாரிசுகளான யுவன்ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ள இந்த படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
 

More News

பாதி எறிந்த நிலையில் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி! பின்னணியில் யார்?

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள காட்டுப் பகுதியில் உடல் சிதைந்த நிலையில்,  பாதி உடல் எரிக்கப்பட்டு

மதுரை உணவகத்தின் மெனுவில் பழைய சோறு: ஆன்லைனிலும் விற்பனை

கடந்த தலைமுறையினர் விரும்பி சாப்பிட்ட உணவுகளில் ஒன்று பழைய சோறு. வெயில் காலத்தில் பழைய சோறும், பச்சை மிளகாயும் சாப்பிட்டால் அதில் இருக்கும் ருசியும், உடலுக்கு குளிர்ச்சியும் வேறு எதிலும் இருக்காது.

ஜியோ டிவியில் தமிழ் ஹெச்டி சேனல்: வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம்

சமீபத்தில் கேபிள் டிவி கட்டணங்கள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் முக்கிய சேனல்களை மட்டுமே பார்த்தால் கூட அதற்கு சுமார் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

சின்னத்திரையில் நடுவராகும் நயன்தாரா

முன்பெல்லாம் சினிமாவில் மார்க்கெட் இழந்த நடிகர், நடிகைகள் மட்டுமே சின்னத்திரைக்கு வருவதுண்டு.

முதலமைச்சர் ஒரு ரியல் ஹீரோ: ஸ்ரீரெட்டி பாராட்டு

திரையில் ஹீரோக்களாக தோன்றுபவர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை, ஆனால் தெலுங்கானா முதலமைச்சர்  சந்திரசேகர ராவ் ஒரு ரியல் ஹீரோ என நிரூபித்துவிட்டார் என நடிகை ஸ்ரீரெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.