close
Choose your channels

டிஜே பிளாக்கின் அடுத்தகட்ட வளர்ச்சி.. மாகாபா, ப்ரியங்கா நேரில் வாழ்த்து..!

Saturday, March 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி உட்பட பல நிகழ்ச்சிகளில் டிஜே பிளாக்கின் பணி மிகவும் சிறந்தது என்பதும் அவருக்கு ஏராளமான பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்தது.

திரை உலக பிரபலங்கள் கூட பலர் தங்களது பேட்டியில் டிஜே பிளாக்கின் டைமிங் காமெடி சென்ஸை பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் பூஜாவின் குடும்பத்தினரும் டிஜே பிளாக்கை பிராங்க் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் டிஜே பிளாக் தற்போது அடுத்த கட்டமாக புத்தம் புதிய ஹோண்டா கார் வாங்கியுள்ளார். ஹோண்டா ஷோரூமில் அவர் காரை பெற்றுக் கொள்ளும்போது அவருக்கு நேரில் மாகாப, பிரியங்கா மற்றும் விஜய் டிவியில் உள்ள பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

இதுகுறித்து டிஜே பிளாக் தனது சமூக வலைத்தளத்தில், ‘இது ஒரு கனவு நனமான தருணம். ஓலா காரில் இருந்து சொந்த கார் வரையிலான என்னுடைய மாற்றத்திற்கு உங்களுடைய அன்பு, ஆதரவு ஆசிர்வாதங்கள் தான் காரணம். அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

எனது சிறந்த நண்பர்கள் இந்த தருணத்தில் உடன் இருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். விஜய் டிவி குடும்பத்திற்கு ஒரு சிறப்பு நன்றி. குறிப்பாக பிரியங்கா மற்றும் மாகாபா ஆகிய இருவருக்கும் எனது நன்றி என்று தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos