ஜெயராம், ஜோஜு ஜார்ஜால் பெரும் ரகளை.. 'ரெட்ரோ' படக்குழுவின் பதிவு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில், ஜெயராம் மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஆகிய 2 பிரபல மலையாள நடிகர்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த இரண்டு பேராலும் படப்பிடிப்பின் போது மிகப்பெரிய ரகளை ஏற்பட்டுள்ளது என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது, நடிகர்கள் ஜெயராம் மற்றும் ஜோஜு ஜார்ஜ் இருவரின் ரகளையால் படப்பிடிப்பு கலகலப்பாக இருக்கும். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு வசனத்தை ஜெயராம் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போது, அவர் மற்ற நடிகர்களின் குரலை போல நகைச்சுவையாக பேசுவார். இதனால், அனைவரும் பெரும் சிரிப்புக்கு உள்ளாகி விடுவார்கள். சில நேரங்களில், டேக்குகளின் போது கூட அவர் தரும் நகைச்சுவை சூழல் காரணமாக படக்குழுவினர் அனைவரும் சிரித்து விடுவதால், படப்பிடிப்பு சில நேரம் தாமதமாகும். இதனால், நடிகர்கள் பல நடிகர்கள் ரீடேக் வாங்குவார்கள்.
அதே நேரத்தில், ஜெயராம் எப்போதும் தனது டேக்குகளை பிழையின்றி ஒரே டேக்கில் முடித்து விடுவார். ஜெயராம் அவர்கள் எப்போதும் தலைவர் குரலை அடிக்கடி பேசுவார், ஏனென்றால் அவர் தலைவரின் மிகப்பெரிய ரசிகர். சூர்யா அவர்கள் கூட, ஜெயராம் சாரின் நகைச்சுவைக்கு பாதிக்கப்பட்டவர் ஆகிவிட்டார். சில சமயம், சூர்யா டேக்குகளின் போது, ஜெயராம் ஏதாவது சொல்ல அப்போது சூர்யா சிரித்துவிடுவார். இதனால், படப்பிடிப்பு மேலும் பரபரப்பாக மாறிவிடும்.
அதேபோல், ஜோஜு ஜார்ஜாவுக்கு தமிழ் ஆசான் கார்த்திக் சுப்புராஜ் தான், அவருக்கு தமிழில் வசனத்தை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அவர் அடிக்கடி மலையாள வசனங்களை கலந்து விடுவார். ஆனால், கேமரா முன் டேக்கின்போது அவர் சரியாக தமிழ் வசனங்களை பேசி, அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார்.
இந்த இரண்டு மாபெரும் திறமை மிக்க நடிகர்களை இயக்கியது என்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது என்று, கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். இது பற்றிய பதிவு, 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
EP: 008 - Actor Jayaram and Joju George’s Ragalaigal on sets – The Powerhouse Performers! 💥
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) April 1, 2025
Whenever Karthik Subbaraj delivers a dialogue or hands over the lines to Jayaram sir, he often mimics other actors’ voices, making everyone on set burst into laughter. 😆😂 Sometimes,… pic.twitter.com/GzIbRdCes7
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments