நிஜமான டான்சிங் ரோஸ் இவர்தான்: இதோ வீடியோ!

  • IndiaGlitz, [Friday,July 23 2021]

பாக்ஸிங் சண்டை படமான ’சார்பாட்டா பரம்பரைதிரைப்படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கேரக்டரில் நடித்து இருந்த சபீர் கலக்கலாக நடித்து இருப்பார் என்பதும் ஒரு கட்டத்தில் இவர் ஆர்யாவின் நடிப்பையே மிஞ்சி விடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பிற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர் என்பதும் தற்போது இவரது நடிப்பு பரபரப்பாக கோலிவுட் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் டான்சிங் ரோஸ் என்ற கேரக்டரை இயக்குனர் ரஞ்சித் எங்கிருந்து பிடித்திருப்பார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. பாக்ஸிங் போட்டியில் உண்மையான டான்சிங் ரோஸ் என்று அறியப்படுபவர் பிரின்ஸ் நசீம் என்பவர் தான். குத்துச்சண்டை போட்டியின் போது எதிரிகளை வீழ்த்துவதற்காக பல தந்திரங்களை கடைப்பிடிப்பார். அவற்றில் ஒன்று டான்ஸ் ஆடி கொண்டே சண்டை போடுவது. எதிராளியின் கவனத்தை திசை திருப்புவதற்கு டான்ஸ் செய்துகொண்டே பாக்சிங் விளையாடும் இவர், எதிராளி அசரும் அந்த ஒரு நொடியில் எதிராளியை தாக்கும் தந்திரத்தை இவர் கடைபிடித்தார்

இவரை வைத்துதான் டான்சிங் ரோஸ் என்ற கேரக்டரை பா ரஞ்சித் உருவாக்கி இருப்பார் என்று கூறப்படுகிறது. தற்போது உண்மையான டான்சிங் ரோஸ் என்று கூறப்படும் பிரின்ஸ் நசீம் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோ இதோ: