நேற்றைய போட்டியில் அம்பத்தி ராயுடு மிஸ் ஆனது ஏன்?

ஐபிஎல் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை அணியின் பல சொதப்பல்கள் தோல்விக்கு காரணமாக இருந்தாலும் 20ஆவது ஓவரை வீசிய நிகிடி 30 ரன்களை வாரி வழங்கியதே தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது

மேலும் முதல் போட்டியான மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அம்பத்தி ராயுடு அபாரமாக விளையாடி நிலையில் நேற்றைய போட்டியில் அவர் விளையாடாததும் தோல்விக்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது. மும்பை அணி கொடுத்த 163 என்ற இலக்கை எட்ட முயற்சித்த சென்னை அணி ஆரம்பத்திலேயே தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய் மற்றும் வாட்சன் விக்கெட்டுக்களை இழந்தது. ஆனால் அதன்பின் அம்பத்தி ராயுடு அதிரடியாக களம் இறங்கி 48 பந்துகளில் 71 ரன்கள் அடித்ததுதான் அந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தது

இந்த நிலையில் முதல் போட்டியில் வெற்றிக்குக் காரணமாக இருந்த அம்பத்தி ராயுடு நேற்றைய போட்டியில் களம் இறங்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு பதிலாக களமிறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் முதல் பந்திலேயே ஸ்டம்பிங் செய்யப்பட்டு அவுட் ஆனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் அம்பத்தி ராயுடு களம் இறங்காதது ஏன் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இது குறித்து தோனி கூறியபோது அம்பத்தி ராயுடு 100% உடல் தகுதி இல்லாததால் தான் அவருக்கு பதிலாக ருத்ராஜ் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனை அடுத்து அம்பத்தி ராயுடுவுக்கு உடல்நல பிரச்சினை உள்ளது என்பதும் இருப்பினும் அவர் அடுத்த போட்டியில் களம் இறங்குவார் என்று எதிர்பார்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன