close
Choose your channels

அஜித் - ஆதி சந்திப்புக்கு காரணம் இதுதானா?

Saturday, May 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அஜித் தற்போது ’ஏகே 61’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் அஜித்தை நடிகர் ஆதி சந்தித்தார் என்ற தகவல் புகைப்படத்துடன் வெளியாகி இணையதளங்களில் வைரலானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த சந்திப்பு ஏன் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் ஆதி, நடிகை நிக்கி கல்ராணியை திருமணம் செய்யப் போகிறார் என்றும் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இம்மாதம் 18 ஆம் தேதி சென்னையில் ஆதி - நிக்கி கல்ராணி திருமணம் நடைபெற உள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் நடிகர் ஆதி தனது திருமணத்திற்கு பல்வேறு திரையுலக பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்து வரும் நிலையில் ’ஏகே 61’ படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அஜித்தும் அவரது குடும்பத்தினரும் கண்டிப்பாக திருமணத்திற்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. அஜித் இதனை ஏற்றுக் கொண்டதாகவும் ஆதி திருமணத்திற்கு அஜித் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’ஏகே 61’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஆதி நடிப்பதாக கூறப்பட்டாலும் இதுகுறித்த தகவல் படக்குழுவினர்களால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.