'குக் வித் கோமாளி' போட்டியாளர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,April 04 2023]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் முக்கியமானது 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி என்பதும் இந்த நிகழ்ச்சி 3 சீசன்கள் வெற்றிகரமாக நடந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு உண்டு என்பதும், ஹாட்ஸ்டார் ஓடிடியில் இந்த நிகழ்ச்சியை தினமும் பார்க்கும் வழக்கமுடையவர்கள் ஏராளமானோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் நான்காவது சீசனில் குக்குகளாக ஸ்ருஷ்டி டாங்கே, ஷெரின், ராஜ் அய்யப்பா, ஷிவாங்கி, விஜே விஷால், காளையன், விசித்ரா, அண்ட்ரின் நெளரிகட், கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதும் அதேபோல் இந்த சீசனின் கோமாளிகளாக மணிமேகலை, சுனிதா, ஜிபி முத்து, மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா, புகழ், குரேஷி, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா பிளஸ்சி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களில் கிஷோர், காளையன், ராஜ் அய்யப்பா ஆகியோர் வெளியேறிய நிலையில் மணிமேகலையும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளார். இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு ஒரு எபிசோடுக்கு சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து கசிந்த தகவல்கள் இதோ



நடிகை விசித்ராவுக்கு சம்பளம்: 20 முதல் 30 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுவதாகவும், ஷிவாங்கி 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுவதாகவும், பிரஞ்சு நடிகையான ஆன்ட்ரியாவுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. விஜே விஷாலுக்கு 20 முதல் 25 ஆயிரமும், சிருஷ்டி டாங்கேவுக்கு 25 முதல் 35 ஆயிரம், ராஜ் அய்யப்பாவுக்கு 20 முதல் 26 ஆயிரம், மைம் கோபிக்கு 40 முதல் 50 ஆயிரமும், ஷெரினுக்கு 30 முதல் 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது என கூறப்படுகிறது.

More News

விஜய் இன்ஸ்டாகிராமை ஃபாலோ செய்த முதல் திரையுலக பிரபலம் யார் தெரியுமா?

 தளபதி விஜய் நேற்று இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு இரண்டே நாட்களில் 5.5 மில்லியன் ஃபாலோயர்கள் குவிந்துள்ளனர்.

6 மனைவிகளோடு உல்லாசமாக வாழும் இளைஞர்… திடீரென்று முளைத்த பிரச்சனை?

ஆறு பெண்களைத் திருமணம் செய்துகொண்டு உல்லாசமாக வாழ்ந்துவரும் இளைஞர் ஒருவருக்குப் புதிதாக ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

ராம்சரண் தேஜா மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சி.. அவர் அணிந்திருந்த உடை இத்தனை லட்சமா?

பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜாவின் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சி துபாயில் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்ற நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராம் சரண் தேஜாவின் மனைவி

கிளைமாக்ஸ் ஆக்சன் காட்சிகள் வேற லெவல்.. 'ஜெயிலர்' படம் குறித்து பிரபலம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் வேற லெவலில் வந்துள்ளது என இந்த படத்தில் பணிபுரிந்த பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு… டொனால்ட் டிரம்ப் சரண் அடைகிறாரா?

முன்னாள் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரச்சார நிதியிலிருந்து ஆபாச நடிகைக்குப் பணம் கொடுத்தார்