ஆதித்ய அருணாச்சலம்' பெயரில் ஒளிந்திருக்கும் ரகசியம்: ஏ.ஆர்.முருகதாஸ்

தர்பார் திரைப்படத்தின் ரஜினியின் கேரக்டர் பெயர் ‘ஆதித்ய அருணாச்சலம்’ என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இந்த பெயரில் உள்ள ரகசியத்தை இன்றைய இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர் கூறினார். அவர் கூறியதாவது:

இங்கு உள்ள ஒவ்வொருவரிடமும் உங்களுக்கு பிடித்த இரண்டு ஆண்கள் யார்? என்ற கேள்வியை கேட்டால் அனைவரிடமும் சொல்லும் ஒரே ஒரு பதில் என்னவெனில் ஒருவர் தங்கள் தந்தையின் பெயரையும் இன்னொருவர் தங்கள் மகனை பெயரையும் சொல்வார்கள்

தந்தையின் மீது அனைவருக்கும் ஒரு மரியாதை இருக்கும், மகன் மீது அனைவருக்கும் ஒரு அன்பு இருக்கும் அந்த வகையில் தந்தை மகன் தான் ஒருவனுக்கு மிகவும் முக்கியமான உறவுகள். அந்த வகையில் அருணாச்சலம் என்பது எனது தந்தையின் பெயர், ஆதித்யா என்பது என் மகனின் பெயர். இந்த இரண்டையும் சேர்த்து தான் ரஜினி அவர்களின் கேரக்டருக்கு ஆதித்யா அருணாசலம் என்ற பெயரை வைத்து இருந்தேன். இதுதான் இந்த பெயரில் ஒளிந்திருக்கும் ரகசியம்’ என்றார்

மேலும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஏஆர் முருகதாஸ் அவர்களிடம் ஒரு கேள்வியை எழுப்பினார். ’தலைவர், தல, மற்றும் தளபதி ஆகிய மூவரையும் இயக்கிய இயக்குனர் நீங்கள்தான். எனவே இவர்கள் மூவர் இடத்திலும் உள்ள ஒரு பொதுவான குணத்தை நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று கேட்டார். அதற்கு ஏஆர் முருகதாஸ் பதில் அளித்தபோது ’தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். மூவரையும் என்னால் ஒப்பிட முடியாது. ஏனெனில் தலைவர் வேற லெவல்’ என்று கூறியபோது ரசிகர்களின் கரகோஷம் அடங்க பல நிமிடங்கள் ஆயிற்று

More News

ரஜினி என்ற கப்பலில் நானும் ஒரு வருடம் பயணம் செய்துள்ளேன். ஏஆர் முருகதாஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது:

அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் தலைவர் தான்: அனிருத்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் இசையமைப்பாளர் அனிருத் பேசியதாவது:

சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிக்கு மட்டுமே: விவேக்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் நடிகர் விவேக் பேசியதாவது:

“எம்.ஜி.ஆர்- க்கு பிறகு ரஜினிதான்: 'தர்பார்' இசைவிழாவில் ஏ.ஆர்.முருகதாஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,

ரஜினி அவர்கள் இரண்டு வார்த்தை பேசினால் அதுதான் இன்றைக்கு செய்தி: ராகவா லாரன்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் நடிகரும் இயக்குனரும்