'திரெளபதி முத்தம் தட்டான் தட்டான்': 'கர்ணன்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

  • IndiaGlitz, [Thursday,March 11 2021]

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’கர்ணன்’. இந்த படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன

ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற மாரியம்மாள் பாடிய ’கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடலும், இசையமைப்பாளர் தேவா பாடிய ’பண்டாரத்தி புராணம்’ என்ற பாடலும் மிகப் பெரிய ஹிட்டானது. மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற மூன்றாவது பாடலான ’திரெளபதி முத்தம் என்ற பாடல் இன்று வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் சற்று முன் தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’திரெளபதி முத்தம் தட்டான் தட்டான்’ என்ற பாடல் இன்று மாலை 4.04 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்து உள்ளார். இந்த பாடலை அனைத்தும் ரசிகர்களும் ரசிக்க தயாராகுங்கள் என்று அவர் குறிப்பிட்டு உள்ளதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் இந்த டுவிட்டை வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

மனைவி, மூன்று குழந்தைகளுடன் செல்வராகவன்: வைரல் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன் என்பதும் அவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதும் தெரிந்ததே.

'குக் வித் கோமாளி' மணிமேகலைக்கு என்ன ஆச்சு? வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

'குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்களில் ஒருவர் மணிமேகலை என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மணிமேகலை இரண்டு வாரங்கள் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வர முடியாத

சீட் கிடைக்காத அதிமுக எம்எல்ஏக்கள்? சசிகலா குறித்து மீண்டும் பீதியை கிளப்பும் வீடியோ!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்று மீண்ட திருமதி சசிகலா குறித்து தமிழகத்தில் அரசியல் விமர்சகர்கள் அனைவரும் ஒரு ஆர்வத்தை வெளிப்படுத்தி இருந்தனர்

குழந்தை தனமா இருக்கு… கணவரிடம் சண்டை போடும் பாலிவுட் நடிகையின் வைரல் வீடியோ!

பாலிவுட் நட்சத்திரமான நடிகை தீபிகா படுகோன் விரல் விட்டு எண்ணக்கூடிய இந்திய பிரபலங்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

தேர்தல் துளிகள்!

அதிமுக-பாஜக-பாமக கூட்டணி, திமுக-காங்கிரஸ்-மதிமுக-விசிக-காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி,