close
Choose your channels

ஜடேஜாவுக்கு பிடித்த தமிழ்ப்பாட்டு.. அஸ்வின் வெளியிட்ட தகவல்..!

Wednesday, May 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜடேஜா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு ஒரு தமிழ் பாட்டு மிகவும் பிடிக்கும் என்று அவர் மைதானத்தில் இருந்த போது டிஜே அந்த பாட்டை போட்டு அவரை மகிழ்வித்தார் என்றும் வீடியோ ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான அஸ்வின் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் ‘ஜடேஜாவுக்கு வானத்தைப் போல படத்தில் இடம் பெற்ற ’எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்ற பாடல் மிகவும் பிடிக்கும் என்று ’நானும் அவரும் ஜிம்மில் வொர்க் அவுட் பண்ணும் போது அவர் அந்த பாட்டை தான் போட்டு கேட்பார்’ என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியில் ஜடேஜா பவுலிங் போட்ட பின்னர் டிஜே ’எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்ற பாடலை ஜடேஜாவுக்காக ஒலிக்க வைத்தார். அஸ்வின் கூறியபடியே அந்த பாட்டை ஜடேஜா மைதானத்தில் ரசித்து கேட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.