என் வாழ்வில் இந்த மூன்று ஆண்கள் முக்கியமானவர்கள்

  • IndiaGlitz, [Sunday,February 10 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் செளந்தர்யாவின் திருமணம் நாளை தொழிலதிபரும் நடிகருமான விசாகனுடன் நடைபெறவுள்ள நிலையில் தன்னுடைய வாழ்வில் மூன்று ஆண்கள் முக்கியமானவர்கள் என்று செளந்தர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஒருவர் எனது டார்லிங் தந்தை, இன்னொருவர் எனது தேவதை போன்ற மகன் அதன் பின் தற்போது என்னுடைய விசாகன். இவர் மூவரும் என்னுடைய வாழ்வில் முக்கியமானவர்கள்' என்று கூறியுள்ள செளந்தர்யா, மூவரின்  புகைப்படங்களியும் பதிவு செய்துள்ளார்.

செளந்தர்யாவின் இந்த டுவீட்டுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. மேலும் நாளை முதல் புதிய வாழ்க்கையை தொடங்கவிருக்கும் செளந்தர்யாவுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது என்பது குறிபிடத்தக்கது