தல அஜித்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,November 23 2017]

தல அஜித் நடிப்பில் 'விவேகம்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அஜித்தின் அடுத்த படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தையும் இயக்குனர் சிவா இயக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை பார்த்தோம்.

இந்த நிலையில் அஜித்-சிவா கூட்டணியில் உருவான 'வீரம்', வேதாளம்', 'விவேகம்' படங்களின் 'V' வரிசைப்படி இந்த படத்திற்கு 'விசுவாசம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் ஜனவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், 2018 தீபாவளி அன்று இந்த படம் வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.