close
Choose your channels

'அம்மா கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் அடுத்த பட டைட்டில்?

Saturday, October 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் வெற்றி தயாரிப்பாளராக இருப்பவர்களில் ஒருவர் 'அம்மா கிரியேஷன்ஸ்' சிவா என்பது அனைவரும் அறிந்ததே. விஜயகாந்த் நடித்த 'பூந்தோட்ட காவல்காரன்' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான தயாரிப்பாளர் சிவா, அதன் பின்னர் அரவிந்தன், சரோஜா, கனிமொழி, அரவான் போன்ற பல படங்களை தயாரித்தார்.

இந்நிலையில் தற்போது அவர் ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்து அதற்கான டைட்டிலையும் தேர்வு செய்துள்ளதாகவும், 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' என்பதுதான் இந்த படத்தின் டைட்டில் என்றும் கூறப்படுகிறது.

'மெட்ராஸ்' புகழ் கலையரசன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படும் இந்த படத்தை இளவரசு என்பவர் இயக்கவுள்ளார். விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.