close
Choose your channels

 ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷிகண்ணா, கேதரின் தெரசா இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில்!

Monday, September 16, 2019 • தமிழ் Comments

பிரபல நடிகைகளான  ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷிகண்ணா, கேதரின் தெரசா ஆகிய மூவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர் என்ற செய்தி ஏற்கன்வே தெரிந்ததே. விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்து படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளிவந்துள்ளது

இந்த படத்தின் டைட்டில் நாளை காலை 11 மணிக்கு அறிவிக்கவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விஜய் தேவரகொண்டாவின் ஒன்பதாவது படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தை கிரியேட்டிவ் கமர்சியல்ஸ் என்ற நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது

விஜய் தேவரகொண்டா நடித்த 'டியர் காம்ரேட்' என்ற திரைப்படம் கடந்த ஜூலை மாதம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகியது. இந்த படம் முதல் நாளில் மட்டும் ரூ.18 கோடியும், முதல் வாரத்தில் ரூ.30 கோடியும் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz