close
Choose your channels

தினகரனின் மொத்த சொத்து மதிப்பு ரூ.74 லட்சமாம்! இதுக்கு எதுக்கு ரெய்டு செஞ்சாங்க!

Friday, December 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் சசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது கோடிக்கணக்கில் கணக்கில் வராத பணம் குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. குறிப்பாக தினகரனின் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடி இருக்கும் என்று ஆளும் கட்சியினர்களே தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டிடிடி தினகரன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில் அவர் தனது சொத்து மதிப்பை குறிப்பிட்டுள்ளார். இதன்படி தினகரனுக்கு அசையும் சொத்து ரூ.16,73,799 இருப்பதாகவும், அசையா சொத்து - ரூ.57,44,008 இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மொத்த சொத்த மதிப்பு ரூ.74,17,807 தான். அதாவது ரூ.1 கோடி சொத்து மதிப்பு கூட அவரிடம் இல்லையாம்.

ரூ.74 லட்சம் மட்டுமே சொத்துக்களை கொண்ட தினகரனின் வீட்டிலும் அலுவலகத்திலும் அப்படி என்ன தான் நாட்கணக்கில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர் என்பது புரியாத புதிராக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.