நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்க அனுமதியா?

  • IndiaGlitz, [Monday,September 28 2020]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் திரை அரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும் இந்த ஏழாம் கட்ட ஊரடங்கில் கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுவிட்டாலும் திரையரங்குகள் திறக்க மட்டும் இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சமீபத்தில் விடுத்த கோரிக்கையை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையை அடுத்து விரைவில் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி நாடு முழுவதும் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைவதை அடுத்து அக்டோபர் 1 முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது

திரையரங்குகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகளை ஏற்பாடு செய்து அதன் பின்னர் திரையரங்கம் திறக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டால் ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் விஜய்யின் ‘மாஸ்டர்’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

More News

பாஜகவில் இணையும்படி நடிகை குஷ்புவுக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை!

நடிகை குஷ்பு தைரியமான பெண்மணி, அவர் பாஜகவில் இணைய வேண்டுமென பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

நிரூபிக்கப்படாத கொரோனா ஊசி… மக்களை கட்டாயப்படுத்தி பரிசோதனை செய்கிறதா சீனா???

சீனா நிரூபிக்கப்படாத கொரோனா தடுப்பூசியை மக்கள்மீது கட்டாயப்படுத்தி பரிசோதனை செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது

நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல்: பரபரப்பு தகவல்

நடிகர் சூர்யா கடந்த சில வருடங்களாக ஆக்கபூர்வமான சமூக கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பதும் இதனையடுத்து அவருக்கு பெரும்பாலானோர் பாராட்டுக்களும் ஒரு சிலர் மட்டும் கண்டனமும் தெரிவித்து

விஜயகாந்த் குடும்பத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே.

ஊழல் செய்யும் அதிகாரிகள் குறித்து மொட்டைக் கடுதாசி போட்டால் என்னாகும்??? புது விளக்கம்!!!

ஊழர் புகார் குறித்த தகவல்கள் மொட்டை (அடையாளம் காண முடியாத நபர்) கடிதம் மூலம் வந்தால் அதன்மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.