close
Choose your channels

தீரன் அதிகாரம் ஒன்று: கார்த்தியின் மிகச்சிறந்த ஓப்பனிங் வசூல் படம்

Monday, November 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் வெளிவந்த மிகச்சிறந்த போலீஸ் படங்களில் ஒன்றாகவும், கார்த்திக்கு வாழ்நாளில் மறக்க முடியாத படமாகவும் விளங்கி வரும் 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமின்றி காவல்துறை அதிகாரிகளும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் இந்த படம் கடந்த வாரயிறுதி நாட்களில் 21 திரையரங்குகளில் 271 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,74,05,088 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் இருந்ததே இந்த படத்தின் வெற்றிக்கு சான்றாக உள்ளது. மேலும் இந்த படம் தெலுங்கிலும் வெளியாகியுள்ளதால் தமிழ்,தெலுங்கு என இருமொழிகளிலும் சேர்த்து கடந்த வாரயிறுதி நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.1,78,16,439 வசூல் செய்துள்ளது.

இதற்கு முன் கார்த்தி நடித்த எந்த படத்திற்கு கிடைக்காத ஓப்பனிங் வசூல் இந்த படத்திற்கு கிடைத்துள்ளதால் அவருடைய மிகச்சிறந்த ஒப்பனிங் வசூல் திரைப்படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.