close
Choose your channels

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் முதல் நாள் தீர்க்கமான வசூல்

Saturday, November 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடிப்பில் 'சதுரங்க வேட்டை' புகழ் H.வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்று திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டிஜிபி ஜாங்கிட் உள்பட ஒருசில உயர் போலீஸ் அதிகாரிகளே இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படம் தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.3.2 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ரூ.52 லட்சமும், கோவையில் ரூ.70 லட்சமும், செங்கல்பட்டில் ரூ.98 லட்சமும், நெல்லை-குமரி பகுதியில் ரூ.11 லட்சமும், சேலம் பகுதியில் ரூ.14 லட்சமும் வசூல் செய்துள்ளது.

இன்றும் நாளையும் விடுமுறை நாள் என்பதால் பெரும்பாலான திரையரங்குகளில் இந்த படத்திற்கு அதிகளவிலான பார்வையாளர்கள் வந்துள்ளதாகவும், இந்த படத்தின் முதல்வாரயிறுதி வசூல், கார்த்தி படத்தின் சிறந்த வசூலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.