close
Choose your channels

கனமழை எதிரொலி: தீரன் அதிகாரம் ஒன்று இசை விழாவில் திடீர் மாற்றம்

Wednesday, November 1, 2017 • தமிழ் Comments

கார்த்தி, ராகுல் ப்ரித்திசிங் நடிப்பில் உருவாகியுள்ள 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் இசை விழா நாளை சென்னையில் பிரமாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. ஆனால் சென்னையில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருவதால் விழாவிற்கு வரும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் நலன் கருதி இந்த விழா ரத்து செய்யப்படுவதாக இந்த படத்தின் தயாரிப்பாளர்களான ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R பிரகாஷ் பாபு,S.R பிரபு அறிவித்துள்ளனர்.

எனினும் இந்த படத்தின் பாடல்கள் நாளை வெளியாகும் என்றும் ரசிகர்கள் இந்த படத்தின் பாடல்களை நாளை கேட்டு மகிழலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் வழக்கம் போல் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நவம்பர் 17 தேதி வெளியாகவுள்ள இந்த படத்தை சதுரங்கவேட்டை' வினோத் இயக்கியுள்ளார்.  கார்த்தி, ராகுல் ப்ரித்திசிங், அபிமன்யூ சிங், போஸ் வெங்கட் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் சிவநந்தீஸ்வரன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz