ஊரடங்கு தளர்வில் மெத்தனம் காட்டும் மக்கள்...! கடுமையான கட்டுப்பாடுகள் வருமா..?

ஊரடங்கு தளர்வில் மெத்தனம் காட்டும் மக்கள்...! கடுமையான கட்டுப்பாடுகள் வருமா..?

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதிகள் இல்லாதது மற்றும் தடுப்பூசி  தட்டுப்பாடு

உள்ளிட்ட காரணங்களால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகள் வந்து குவிகின்றனர்.  ஆம்புலன்சிலே தொற்று பாதிக்கப்பட்ட பலருக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கும் நிலையில் மருத்துவர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில், தமிழக அரசு முழு ஊரடங்கை இரு வாரங்களுக்கு பிறப்பித்துள்ளது.  ஆனால் ஊரடங்கில் சில தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் மெத்தனம் காட்டி வருவதாகவும், கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவில்லை என்றும்  குற்றச்சாட்டுகள் எழும்பியுள்ளன. காவல் துறையினரும் கடுமையான நடவடிக்கைகள்  எடுக்காமல், மென்மையாக நடந்து கொள்வதால் மக்கள் ஊரடங்கை பின்பற்றாமல் எல்லை மீறி நடந்து கொள்கின்றனர்.  இதனால் காவல் அதிகாரிகள் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லையெனில் இந்த இரண்டு வார ஊரடங்கு என்பது பயனில்லாமல் போய்விடும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

இதைத்தொடர்ந்து டுவிட்டரில் பலரும் முதல்வர் ஸ்டாலினிடம் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். மதியம் 12 மணி வரை கடைகள் திறந்திருக்க வேண்டும் என்பதால், மக்கள்  சாலைகளில் அவசியமில்லாமல் அலைந்து வருகிறார்கள். கடைகள், தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்துகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் மட்டுமே கொரோனா குறைய வாய்ப்புள்ளது என பலரும் முதல்வரை  டேக் செய்து டுவிட் போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் இதுகுறித்து முக்கிய நடவடிக்கைகள் எடுப்பார் என மக்கள் சார்பாக  எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரஜினிகாந்த் மகள் ரூ1 கோடி நிவாரண நிதி: முதல்வரை நேரில் சந்தித்து வழங்கினார்.

கொரோனா நிவாரண நிதியாக பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து தமிழக அரசுக்கு நிதி குவிந்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

கொரோனா- கண்களைப் பறித்துவிடும் கருப்பு பூஞ்சை? எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கருப்பு பூஞ்சை எனப்படும்

கொரோனா நிவாரண நிதி: அஜித் கொடுத்தது எத்தனை லட்சம் தெரியுமா?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கூடுதல் செலவினங்கள் இருப்பதால்

மனைவிக்காக கெஞ்சிய கணவர்… இரக்கமே இல்லாமல் கொள்ளையர் செய்த வெறிச்செயல்!

கிரேக்க நாட்டு தலைநகர் ஏதேன்ஸில் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்துக் கொண்ட பின்பும் இரக்கமே

அலைக்கு நடுவிலும் சுவாரசியம்… கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 110 வயது தாத்தா!

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் ஒட்டுமொத்த தற்போது இந்தியாவே பீதி அடைந்து இருக்கிறது.