close
Choose your channels

மனிதர்களின் தொல்லையே இல்லை!!! கடலில் இருந்து வெளியே வந்த 8 லட்சம் ஆமைகள்!!!

Wednesday, April 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மனிதர்களின் தொல்லையே இல்லை!!! கடலில் இருந்து வெளியே வந்த 8 லட்சம் ஆமைகள்!!!

 

கொரோனா நோய்த்தொற்று பரவியதில் இருந்து பெரும்பலான நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே சுற்றுலாத் தளங்கள், கடற்கரைகள் எல்லாம் வெறிசோடி கிடக்கின்றன. இந்த சமயத்தைப் பயன்படுத்திக்கொண்ட Ridley Olive வகை ஆமைகள் ஒடிசாவின் கடற்கரையில் தற்போது மகிழ்ச்சியாக கடற்கரை காற்றை சுவாசித்து வருகின்றன. மேலும், Gahirmatha, Rushikulya கடற்கரை பகுதிகளில் சுமார் 8000 ஆமைகள் இனப்பெருக்கத்துக்காகத் தற்போது கடலில் இருந்து வெளியே வந்துள்ளது. ஆள்நடமாட்டம் இல்லாததால் அவை சுதந்திரமாக சுற்றித் திரியும் காட்சியை வனத்துறை அதிகாரி ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி “1000 ஆமைகள் ஒன்றுகூடினாலே அது வெகுஜனக் கூடலாகத்தான் இருக்கும். ஆமைகள் முட்டைப் பொறித்த இடத்திற்கு மீண்டும் முட்டையிடுவதற்காக மிகவும் மகிழ்ச்சியாக வந்து செல்கின்றன” எனப் பதிவிட்டுள்ளார். மனிதர்களின் நடமாட்டம் பெரும்பாலான உயிரினங்களில் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துவிடுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால் பல்வேறு உயிரினங்கள் எந்த தொந்தரவும் உலகம் முழுவதும் சுற்றித்திரிகின்றன. ஆனால் கூடிய விரைவில் விலங்குகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதும் வருத்தத்திற்குரியது.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.