close
Choose your channels

ஜிவி பிரகாஷ் படத்திற்காக தெருக்குரல் அறிவு எழுதி பாடிய பாடல் வைரல்!

Friday, February 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்காக தெருக்குரல் அறிவு எழுதி பாடிய பாடலொன்று சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் மதிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவான திரைப்படம் ’செல்பி’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’ஊர்க்காரன்’ என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதி தேர்வு பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் ஜோடியாக வர்ஷா பொம்மலா நடித்துள்ள இந்த படத்தில் கௌதம் வசுதேவன், குணாநிதி, வாகை சந்திரசேகர், சங்கிலிமுருகன், தங்கதுரை, சுப்பிரமணிய சிவா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.