'வாரிசு' ஆடியோ விழாவில் இந்த மூன்று பிரபலங்களா? ஆச்சரிய தகவல்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் வெளியாகி மூன்றுமே ஹிட்டாகிய நிலையில் வரும் 24-ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான மேடை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்திய திரையுலகில் முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கமல்ஹாசன், ஷாருக்கான் மற்றும் மகேஷ் பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினராக இந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதல் முறையாக விஜய் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கமல்ஹாசன், ஷாருக்கான், மகேஷ்பாபு உள்ளிட்ட பிரபலங்கள்கலந்து கொள்ள இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

More News

டிசம்பர் கடைசி வாரம்: ரிலீசாகும் 6 படங்களில் 4 நாயகிகளின் படங்கள்!

2022 ஆம் ஆண்டின் கடைசி வாரமான 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 6 தமிழ் படங்கள் ரிலீஸாக உள்ளன என்பதும் அதில் 4 திரைப்படங்கள் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரி காலத்தில் இந்த தமிழ் நடிகை ஒரு கால்பந்து வீராங்கனையா? வைரல் புகைப்படங்கள்!

 உலக கோப்பை கால்பந்து திருவிழா சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் கால்பந்து போட்டியில் நட்சத்திர நாயகன் மெஸ்ஸிக்கு உலகமே வாழ்த்துக்களை தெரிவித்து என்பதையும் பார்த்தோம்.

பிக்பாஸ் மகேஸ்வரிக்கு இவ்வளவு பெரிய மகனா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான விஜே மகேஸ்வரியின் மகன் புகைப்படம் வெளியாகி உள்ள நிலையில் மகேஸ்வரிக்கு இவ்வளவு பெரிய மகனா?

தெருக்களில் சைக்கிள் ரைட்.. ஆற்றில் விட்ட விளக்கு: ரம்யா பாண்டியனின் வியட்நாம் வீடியோ

 நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியன் தற்போது வியட்நாமில் தனது தோழிகளுடன் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் கடந்த சில நாட்களாக அவர் வியட்நாம் சுற்றுப்பயணம்

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்த 'பேட்டைக்காளி' நடிகர்!

தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது