close
Choose your channels

இந்த மூன்று நடிகைகளும் 'தளபதி 68' படத்தில் இல்லை: உறுதி செய்த வெங்கட் பிரபு..!

Monday, August 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ திரைப்படத்தில் இந்த மூன்று நடிகைகளும் படத்தின் ஹீரோயின் இல்லை என்று இயக்குனர் வெங்கட் பிரபு உறுதி செய்துள்ளார்.

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு அனேகமாக அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியை வெங்கட் பிரபு முடித்து விட்டதாகவும் தற்போது அவர் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யும் பணியில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இந்த படத்தில் நடிக்கும் நாயகி குறித்த தகவல்கள் கசிந்துள்ள நிலையில் நேற்று நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இது குறித்த வதந்திகளுக்கு வெங்கட் பிரபு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

குறிப்பாக இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று நடிகைகளும் இல்லை என்பதை அவர் உறுதி செய்துள்ளார். ஆனால் ’தளபதி 68’ படத்தில் விஜய் ஜோடியாக ஜோதிகா நடிக்க இருப்பதாக ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அது குறித்து வெங்கட் பரப்பு எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.