பிக்பாஸ் வீட்டில் ரீஎண்ட்ரி ஆவது இந்த மூன்று போட்டியாளர்களா? நிக்சனுக்கு ஒரு ஆப்பு இருக்குது..!

  • IndiaGlitz, [Monday,November 20 2023]

பிக் பாஸ் வீட்டில் ஏற்கனவே வெளியேற்றப்பட்ட மூன்று போட்டியாளர்கள் ரீஎண்ட்ரியாக போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த மூன்று போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது. அவர்கள் விஜய் வர்மா, அனன்யா ராவ் மற்றும் வினுஷா என்று கூறப்படுகிறது.

பிக் பாஸ் வீட்டில் ரிஎண்ட்ரியாகும் மூன்று போட்டியாளர்களுக்கும் ஏற்கனவே இருக்கும் போட்டியாளர்களுக்கும் டாஸ்க் நடக்கும் என்றும் இந்த டாஸ்க்கில் 3 போட்டியாளர்கள் வென்று விட்டால் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்வார்கள் என்றும் அதற்கு பதிலாக ஏற்கனவே இருக்கும் 14 போட்டியாளர்களில் சிலர் வெளியேற்றப்படுவார்கள் என்றும் பிக்பாஸ் அறிவித்தார்.

எனவே உள்ளே வரும் 3 போட்டியாளர்கள் வலிமையான போட்டியாளர்களாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நாமினேஷன் செய்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் மட்டுமே ரிஎண்ட்ரியில் வருவார்கள் என்று பிக் பாஸ் கூறியதால் அதில் பிரதீப் இருக்க வாய்ப்பு இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு ரீ என்ட்ரி ஆவது விஜய் வர்மா, அனன்யா ராவ் மற்றும் வினுஷா என்று தெரிகிறது. விஜய் வர்மா ஏற்கனவே விஷ்ணுவுடன் மோதியுள்ளார் என்பதும் நிக்சன் தன்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் வர்ணித்ததற்கு வினுஷா பதிலடி கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே அனன்யாராவ் வெளியேறிவிட்டதால் அவரது திறமை வெளியே தெரியவில்லை. இதனை அடுத்து தற்போது அவர் ரீஎண்ட்ரி ஆவதால் தன்னுடைய திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நான் அழுவதற்கான காரணம் என் குழந்தைகளுக்கு புரியவில்லை: செல்வராகவன் உருக்கம்..!

 நான் அழுவதை பார்த்து நான் அழுவதற்கு காரணம் என்ன என்று என் குழந்தைகளுக்கு புரியவில்லை என்றும்  தந்தை அழுது அவர்கள் பார்த்ததில்லை என்றும் இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில்

த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு.. மன்சூர் அலிகான் மீது அதிரடி நடவடிக்கை..!

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.  

பிரதீப் மீண்டும் உள்ளே வருகிறாரா? பிக்பாஸ் அறிவிப்பால் அதிர்ச்சியாகும் போட்டியாளர்கள்..!

 பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை எலிமினேஷன் செய்யப்பட்டவர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர். இந்த நிலையில் மேலும் 3 போட்டியாளர்கள் பிக் பாஸ்

ஸ்மால் பாஸ் ஹவுஸ்-க்கு 6 பேரை அனுப்பிய தினேஷ்: இந்த 2 பேர் லிஸ்ட்லேயே இல்லையே..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் ஸ்மால் பாஸ் ஹவுஸ் என்ற ஒரு புதிய வீடு இருக்கிறது என்பதும் இந்த ஹவுஸில் சில போட்டியாளர்கள் அனுப்பப்பட்டு வந்தனர் என்பதையும் பார்த்தோம்.

காருக்குள் மர்மமான முறையில் மரணம் அடைந்த பிரபல நடிகர்.. போலீஸ் விசாரணை..!

'அய்யப்பனும் கோஷியும்' உள்பட ஒரு சில மலையாள படங்களிலும் சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்த நடிகர் ஒருவர் மர்மமான முறையில் காரில் மரணம் அடைந்திருந்தது திரையுலகை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி