மூன்றாவது முறையாக சிம்புவுடன் மோதும் பிரபல நடிகரின் படம்!

  • IndiaGlitz, [Thursday,June 30 2022]

நடிகர் சிம்பு நடித்த படங்கள் ரிலீஸ் ஆன அதே நாளில் பிரபல நடிகரின் படங்கள் ஏற்கனவே இரண்டு முறை மோதிய நிலையில் தற்போது மூன்றாவது முறையாக வரும் செப்டம்பர் 15ம் தேதி இரு நடிகர்களின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு நடித்த ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாக இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதே நாளில் ஜெயம் ரவி நடித்த ’அகிலன்’ திரைப்படமும் வெளியாக உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கபட்டுள்ளது. இருப்பினும் இரு திரைப்படங்களும் தங்கள் ரிலீஸ் தேதியில் எந்தவித மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளதால் செப்டம்பர் 15-ஆம் தேதி சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ மற்றும் ஜெயம்ரவியின் ’அகிலன்’ ஆகிய திரைப்படங்கள் மோதுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி சிம்புவின் ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்துடன் ஜெயம் ரவியின் 'வனமகன் திரைப்படம் மோதியது என்பதும் அதேபோல் 2021ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று சிம்புவின் ’ஈஸ்வரன்’ திரைப்படத்துடன் ஜெயம் ரவியின் ’பூமி’ திரைப்படம் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது, இதில் ’ஈஸ்வரன்’ திரையரங்கிலும் ’பூமி’ ஓடிடியிலும் ரிலீஸ் ஆனாலும் இரண்டு திரைப்படங்களிலும் நிதி அகர்வால் தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

More News

துபாயில் முதலமைச்சரை சந்தித்த கமல்ஹாசன்: 3 வருடங்களுக்கு பின் நடந்த சந்திப்பு!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் சமீபத்தில் துபாய் சென்ற நிலையில் அங்கு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களை சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரோலக்ஸை அடுத்து சூர்யாவுக்கு ஒரு செம கேரக்டர்: இயக்குனர் இந்த பிரபலமா?

சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்தின் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்த சூர்யாவுக்கு அடுத்ததாக வித்தியாசமான செம கேரக்டரை பிரபல இயக்குனர்

திருமணம் குறித்து தைரியமான கருத்து தெரிவித்த ஸ்ருதிஹாசன்: ரசிகர்கள் ஷாக்!

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் திருமணம் குறித்து தனது தைரியமான கருத்தை தெரிவித்த நிலையில் அவரது ரசிகர்கள் ஷாக் அடைந்துள்ளனர்.

'விருமன்' முத்தையாவின் அடுத்த படத்தின் ஹீரோ இந்த பிரபலமா? 

கார்த்தி மற்றும் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் நடிப்பில் உருவான 'விருமன்' படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையா தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டதாகவும் அவரது படத்தில் ஹீரோவாக

ஆஸ்கார் கமிட்டியின் அழைப்பு: சூர்யா பதிவு செய்த டுவிட் வைரல்!

ஆஸ்கர் விருது வழங்கும் அகடாமி சமீபத்தில் புதிய உறுப்பினர்களை இணைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது என்பதும் 394 பேருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு பட்டியலில் தமிழ் நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட்