சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய, "திரு மாணிக்கம்" திரைப்படம், ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது !


Send us your feedback to audioarticles@vaarta.com


இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, புத்தம் புதிய ப்ளாக்பஸ்டர், திரு மாணிக்கம், திரைப்படம் 24 ஜனவரி 2025 முதல், ஓடிடி தளத்தில் ப்ரீமியர் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. . ஐந்தாம் வேதம், ரகுதாதா மற்றும் டிமாண்டி காலனி போன்ற வெற்றிப் படைப்புகளைத் தொடர்ந்து, ZEE5 மீண்டும் ஒரு அற்புதமான ஃபேமிலி டிராமா திரைப்படத்துடன் ரசிகர்களை அசத்தவுள்ளது. 2024 ஆம் வருடத்தில் வெளியான மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகப் பாராட்டப்பட்ட, "திரு மாணிக்கம்" திரைப்படத்தை, இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அனன்யா, பாரதிராஜா மற்றும் ஜசீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நல்லவனாக இருப்பதற்கே, பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டாலும், இறுதியில் நாயகனின் மனிதநேயம் எப்படி வெற்றி பெறுகிறது என்பதைக் காட்டும் இப்படம், ஜனவரி 24 முதல், கன்னடம் மற்றும் மலையாள டப்பிங் பதிப்புகளிலும் கிடைக்கும்.
திரு மாணிக்கம் திரைப்படம், தமிழ்த் திரையுலகில் மிகப்பெரும் அலையை உருவாக்கியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்படப் பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். இப்படம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறிப்பிடுகையில்... இது மிக "அற்புதமான படைப்பு", இப்படத்தின் ஆழமும், உணர்வுகளும் படம் முடிந்த பின்னும் நம்மை விட்டு அகலவில்லை. இயக்குநர் நந்தா பெரியசாமிக்கு தமிழ்த்திரையுலகில் மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. சமுத்திரக்கனி, பாரதிராஜா உட்பட அனைவரும் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர், படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்றார். மேலும் ஆர்யா முதல் ஐஏஎஸ் இறையன்பு வரை, பல முன்னணி ஆளுமைகள் பலரும், இப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவரிடமும் பாராட்டைப் பெற்ற, திரு மாணிக்கம் படத்தை, ஜனவரி 24 அன்று ஓடிடியில் கண்டுகளியுங்கள்.
ZEE5 இன் தலைமை வணிக அதிகாரியும், ZEE Entertainment Enterprises Ltd இன் தலைமை தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு அதிகாரியுமான சிவக்குமார் சின்னசாமி கூறுகையில்..,
இந்த வருடத்தின் மிகச்சிறந்த படைப்பான “திரு மாணிக்கம்" திரைப்படத்தை, ZEE5 க்கு கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உலகளாவிய ரசிகர்களைக் கவர்ந்த, ஐந்தாம் வேதம், ரகுதாதா, மற்றும் டிமாண்டி காலனி 2 ஆகியவற்றின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் ஒரு அரிய ரத்தினமான திரு மாணிக்கம் திரைப்படம் ஓடிடியில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நாங்கள் நம்புகிறோம். திரையரங்குகளில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், இப்போது ஓடிடி மூலம் அனைவரையும் மகிழ்விக்க வருகிறது.
ஒவ்வொரு குடும்பமும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் என, இப்படத்தை மனதாரப் பாராட்டியதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். திரு மாணிக்கம் நன்மை மற்றும் நேர்மையின் மதிப்பை எடுத்துரைத்து, எல்லா வயதினரையும் ஈர்க்கும் கதையாக அமைந்துள்ளது. ZEE5 மூலம் தொடர்ந்து நல்ல கதைக்களத்தில், சிறந்த படைப்புகளை, எங்களது பார்வையாளர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.
இயக்குநர் நந்தா பெரியசாமி பகிர்ந்துகொண்டதாவது..,
திரு மாணிக்கம் ஒரு நம்பமுடியாத பயணம், இப்போது ZEE5 இல் திரையிடப்படுவதைக் கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். திரையரங்குகளில் ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்த இப்படம், இப்போது ஓடிடி மூலம் அனைவரையும் மகிழ்விக்கவுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிவகுமார், ஆர்யா, ஐஏஎஸ் இறையன்பு, இயக்குநர் அமீர், நித்திலன் சுவாமிநாதன், தமிழரசன் பச்சமுத்து, கார்த்திக் சுப்பராஜ் போன்ற திரைத்துறை ஜாம்பவான்கள் தந்த அங்கீகாரத்திற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்களின் வார்த்தைகள், எனக்கும் ஒட்டுமொத்த குழுவிற்கும் மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது. இப்படைப்பை உருவாக்கியதில் முழு அர்ப்பணிப்புடன் உழைத்த நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு நன்றி. ஓடிடி மூலம் உலகளாவிய பார்வையாளர்கள் இப்படத்தைக் கண்டு மகிழ்வதைக் காணவும், அவர்களின் கருத்துக்களைக் காணவும் ஆவலோடு உள்ளேன்.
நடிகர் சமுத்திரக்கனி பகிர்ந்துகொண்டதாவது..,
“ஒரு நடிகராக என்னால் என்ன செய்ய முடியும் என்ற எல்லையைத் தாண்டி, எனக்குச் சவாலான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டுமென்பதில், நான் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். திரு மாணிக்கம் திரைப்படம் எனக்குப் புதுமையான மற்றும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பெரிய வணிகப் படங்களில் பணியாற்றும் அதே நேரத்தில், திரு மாணிக்கம் போன்ற சிறிய ரத்தினங்களிலும் பல வருடங்களாக, என்னால் பணியாற்ற முடிந்தது பெருமை. இப்போது ZEE5 மூலம், இப்படம் பரந்த பார்வையாளர்களைச் சென்றடைவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். அர்த்தமுள்ள கதைகளை ரசிகர்கள் எப்போதும் கொண்டாடுவார்கள். பெருமைப்படக்கூடிய ஒரு படைப்பில் நானும் ஒரு இருப்பதில் மகிழ்கிறேன்.
திரு மாணிக்கம் படத்தின் கதை, லாட்டரி கடை உரிமையாளரான மாணிக்கத்தை (சமுத்திரக்கனி) பற்றியது. மாணிக்கம் பரிசு விழுந்த 1.5 கோடி மதிப்புள்ள டிக்கெட்டை, உரியவரிடம் திருப்பித் தர, அவரைத் தேடிப் புறப்படுகிறார். நேர்மைக்கும் செல்வத்தின் மீதுள்ள மோகத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார். நேர்மைமிக்க அவரது உன்னதமான செயல் தொடர்ச்சியான சவால்களைச் சந்திக்கிறது. இது அவரது குடும்பத்தில் சிக்கல்களையும் மற்றும் மாறிப்போன சமூகத்தின் அழுக்கையும் அம்பலப்படுத்துகிறது. மாணிக்கம் தனது நேர்மையைக் காப்பாற்ற, குடும்பத்தையும், சமூகத்தையும் எப்படிச் சமாளிக்கிறார் அதில் எப்படி ஜெயிக்கிறார் என்பது தான் இந்தப்படம்.
ஜனவரி 24, 2025 முதல் ZEE5 இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும், திரு மாணிக்கம் திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரைத் தவறவிடாதீர்கள்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Ishaan Murali
Contact at support@indiaglitz.com
Comments