ரஜினி யாருடன் கூட்டணி வைக்கக்கூடாது: திருமாவளவன் கருத்து

  • IndiaGlitz, [Saturday,May 20 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து ஒரிரு வார்த்தைகள் தான் பேசினார். ஆனால் அதுவே தமிழக அரசியலில் ஒரு பெரும் புயலை கிளப்பிவிட்டது. தமிழக அரசியல்வாதிகள் அனைவருக்கும் 'ரஜினி ஜூரம்' பிடித்துவிட்டதாக டுவிட்டரில் கூட கிண்டலுடன் பதிவுகள் வருகிறது.

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கருத்து கூறிய திருமாவளவன், ரஜினி கூறியது போல தான் தலித்துக்களுக்கு மட்டும் போராடவில்லை என்றும் ஒட்டுமொத்த தேச மக்களின் நலனுக்காக, தான் போராடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் 40 வருடங்களாக தமிழக பிரச்சனைகளை உற்று நோக்கி வரும் ரஜினிகாந்த், அரசியலுக்கு வந்தால் சிறப்பாக செயல்படுவார் என்றும் ரஜினி அரசியலுக்கு வந்தபின்னர் காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அது அவரது அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.

More News

99.99 சதவிகிதம் ரஜினி அரசியலுக்கு வர மாட்டார். பிரபல காமெடி நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பேச்சு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரமுகர்களும் கூறிய கருத்துக்களை அவ்வப்போது பார்த்து கொண்டு வருகிறோம். கிட்டத்தட்ட அனைவருமே அவர் அரசியலுக்கு வந்துவிடுவார் என்றே கூறி வருகின்றனர்...

இந்த கிராமத்தில் பிறந்த அனைவரின் பிறந்த தேதியும் ஜனவரி 1. எப்படி தெரியுமா?

வருடத்தின் முதல் நாளான ஜனவரி 1ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடுவது என்பதே ஒரு தனி மகிழ்ச்சிதான்...

சிஸ்டம் கெட்டு போச்சு: ரஜினியின் கருத்துக்கு தம்பித்துரை பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று ரசிகர்களிடையே பேசியபோது, ஒருசிலதலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் அனைவரும் திறமையானவர்கள் தான்.

விஷாலின் வேலைநிறுத்த திட்டத்திற்கு மேலும் ஒரு தடை!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 1 முதல் ஒட்டுமொத்த திரையுலகமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் என்று அறிவித்திருந்தார். விஷாலின் இந்த அறிவிப்புக்கு திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் மற்றும் விநியோகிஸ்தர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்ததோடு, வழக்கம் போல் ஜூன் 1 முதல் திரையரங்க&#

சிம்புவின் 'AAA' படத்தின் முக்கிய கேரக்டரில் இயக்குனரின் தந்தை

சிம்பு நடித்து வரும் 'AAA' என்ற 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படத்தின் முதல் பாகம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...