ரஜினியை தடுத்தது ஏன்? திருமாவளவன் விளக்கம்

  • IndiaGlitz, [Tuesday,March 28 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை சென்று லைகா நிறுவனத்தின் கலந்து கொள்வதோடு மட்டுமின்றி இலங்கை அதிபரிடம் மீனவர் பிரச்சனை குறித்தும் பேசவிருந்த நிலையில் அவரது பயணத்தை தமிழக அரசியல் தலைவர்கள் சிலபல காரணங்களை கூறி தடுத்துவிட்டனர். ரஜினியும் தனது விளக்க அறிக்கையில் அவர்கள் கூறும் கருத்து தனது ஏற்புடையது இல்லை எனினும் அவர்களுடைய அன்புக்கு கட்டுப்பட்டு பயணத்தை ரத்து செய்வதாக கூறினார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் இலங்கை செல்லவிடாமல் தடுத்தது ஏன் என்று திருமாவளவன் தற்போது விளக்கம் கூறியுள்ளார். 'கிளிநொச்சி, வவுனியா, திரிகோணமலை உள்ளிட்ட பகுதிகளில், போரின்போது காணாமல்போனவர்களின் உறவினர்கள், முப்பது நாள்களுக்கும் மேலாக இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திவருகின்றனர்.
மேலும், ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் 42 நாடுகள் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இதைத் திசை திருப்பவே, இலங்கை அரசு, ரஜினியை அங்கு அழைத்தது. சர்வதேச மன்றத்தில் இலங்கை தப்பிக்காமல் இருக்கவே, ரஜினி இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது' என்று கூறியுள்ளார்.

More News

மீண்டும் ஒரு மெரீனா போராட்டமா? போலீசார் குவிப்பால் பதட்டம்

கடந்த ஜனவரி மாதத்திற்கு பின்னர் சென்னை மெரீனா என்றாலே அது ஒரு சுற்றுலா பகுதி என்பதே மறந்து, மாணவர்களின் ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டம்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 'டோரா' ரன்னிங் டைம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபகாலமாக நாயகிக்கு முக்கியத்தும் உள்ள வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சமுத்திரக்கனி படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை

சமுத்திரக்கனி இயக்கி நடித்த 'அப்பா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது

நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா தேதி அறிவிப்பு

நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக பதவியேற்ற நாசர் தலைமையிலான இளைஞர்கள் அணி, கடந்த சில மாதங்களில் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது

முக்குலத்தோர் புலிப்படையில் இருந்து கருணாஸ் திடீர் நீக்கம்.

பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் திருவாடனை தொகுதியின் எம்.எல்.வுமான கருணாஸ் சமீபத்தில் தனது 'முக்குலத்தோர் புலிப்படை' கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும் கூண்டோடு நீக்கி அதிரடி உத்தரவிட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.