உத்தம வில்லன் லாபகரமான படமா? யூடியூப் சேனலுக்கு லிங்குசாமியின் நிறுவனம் கண்டனம்..!

  • IndiaGlitz, [Thursday,April 18 2024]

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் ’உத்தம வில்லன்’ திரைப்படம் தங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்த படம் என்றும் இந்த படம் லாபகரமான படம் என்று யூடியூப் சேனல் கூறியதற்கு கண்டனம் தெரிவித்து கொள்வதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலக திரை ரசிகர்களுக்கு அன்பான வணக்கம்,

தீபாவளி, பையா, வேட்டை, இவன் வேற மாதிரி, வழக்கு எண் 18/9, கும்கி. கோலிசோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை . ரஜினிமுருகன் போன்ற தரமான மிகப்பெரிய வெற்றி படங்களையும், தேசிய விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்ற படங்களை தயாரித்து வெளியிட்ட எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தான்

பத்மஸ்ரீ திரு கமலஹாசன் அவர்களை வைத்து முதல் பிரதி அடிப்படையில் தயாரித்த திரைப்படமான “உத்தம வில்லன் எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நிதி நெருக்கடியையும், ஏற்படுத்திய படமாகும். இது திரு.கமலஹாசன் அவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

உத்தம வில்லன் திரைப்படத்தின் மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக திரு.கமல்ஹாசன் அவர்களும் அவரது சகோதரர் அமரர் திரு.சந்திரஹாசன் அவர்களும் எங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்து தயாரித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர்.

அதற்குண்டான வேலைகளில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் சமூக வலைத்தளமான வலை பேச்சு என்கிற யூடியூப் சேனலில் உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று இயக்குனர் திரு லிங்குசாமி கூறியதாக 17-04-2024 அன்று தவறான தகவல்களை கூறியுள்ளனர் . இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற தவறான பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

 

More News

எம் எஸ் பாஸ்கர் முக்கிய வேடத்தில் நடித்த அக்கரன் திரைப்பட இசை வெளியீட்டு விழா..!

குன்றம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர்  அருண் K பிரசாத் இயக்கத்தில், எம் எஸ் பாஸ்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, மாறுபட்ட களத்தில் வித்தியாசமான திரில்லர் திரைப்படமாக

ரச்சிதா மகாலட்சுமியின் முதல் முயற்சி.. பாலாஜி முருகதாசுக்காகவா? வைரல் வீடியோ..!

சின்னத்திரை நடிகை மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் ரச்சிதா மகாலட்சுமி முதல் முறையாக ஒரு முயற்சி செய்து உள்ள வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விக்ரமின் 'சியான் 62' படத்தின் டைட்டில் இதுதான்.. மாஸ் போஸ்டர் ரிலீஸ்..!

விக்ரம் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சியான் 62' படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர்

ராம நவமி அதிசயம்: அயோத்தியில் ராமரின் நெற்றியில் சூரிய ஒளி!

ராம நவமி தினத்தன்று அயோத்தியில் அற்புதமான நிகழ்வு ஒன்று நடந்தது. புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயிலில், பால ராமரின் நெற்றியில் சூரிய ஒளி நேரடியாக விழுந்தது.

ஸ்ரீ ராம நவமி: ராமரின் 16 குணங்கள், அவதாரங்கள், பாலம் கட்டிய கதை! - திருமதி. U.E.சிந்துஜா

இந்த ஸ்ரீ ராம நவமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது! ஏனெனில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டிய பிறகு நடக்கும் முதல் ராம நவமி இது