Download App

Thiruttu Payale 2 Review

திருட்டு பயலே 2 - சமூக வலையின் வில்லன்களை தோலுரிக்கிறான்

ஏ ஜி எஸ் நிறுவனம் முதன் முதலில் தயாரித்த வெற்றி படம் திருட்டுப்பயலே இயக்கிய அதே சுசி கணேசனுடன் மீண்டும் கைகோர்த்து இந்த ரெண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார்கள். முதல் படம் போல இதுவும் மக்களை கவரும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

பாபி சிம்மா ஒரு போலீஸ் காரர் அவர் வேலை மற்றவர்களின் செல் போன்களை ஒட்டு கேட்பது. அவர் மனைவி அமலா பால் பேஸ் புக் மற்றும் செல்பீக்கு அடிமை. தான் ஒட்டு கேட்கும் அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளின் திட்டங்களை வைத்துக்கொண்டு அவர்களை ஏமாற்றி யாருக்கும் தெரியாமல் பெரிய பங்களா வாங்கும் அளவுக்கு பணம் சம்பாதிக்கிறார். ஒரு முறை தான் ஒட்டு கேட்கும் உயர் அதிகாரியின் கள்ள காதலன் பிரசன்னாவுக்கு குறுக்கே ஒரு கால் வர அது தன்னுடைய மனைவியுடையது என்பதை அறிந்து அதிர்கிறார் பாபி. பிரசன்னா பேஸ் புக் மூலம் குடும்ப பெண்களை வேட்டையாடி அவர்களை கைவிடுபவர். இம்மூவருக்குள்ளும் நடக்கும் உணர்ச்சி போராட்டம் என்ன ஆனது என்பதே மீதி கதை.

பாபி சிம்மாவுக்கு நடிப்பதற்கு நல்ல தீனி போடும் கதாபாத்திரம் இந்த படத்தில் கிடைத்திருக்கிறது அதை மிக சிறப்பாக செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். மனைவியிடம் கொஞ்சுவதிலாகட்டும் உயர் அதிகாரியிடம் அடக்கி வாசிப்பது சமயம் கிடைக்கும் போது திருட்டு புயலாக மாறி சம்பாதிப்பது வில்லனிடம் ஆக்ரோஷம் காட்டி தாக்குவது என்று ஜொலிக்கிறார். பாபி அமலா வீட்டில் பிரசண்ணா வரும் காட்சியில் மூவரும் ஒருவருக்கொருவர் நடித்து கொள்ளும் காட்சியில் பாபியே கவனம் ஈர்க்கிறார். செல்பீ மற்றும் பேஸ் புக் அடிமையாக இருக்கும் ஒரு நவீன காலத்து இளம் மனைவியாக கச்சிதமாக பொருந்துகிறார் அமலா பால். பாபியுடன் அந்யோனியம் பிரசன்னாவுடன் நட்பு தனக்கு பாதகமான பின் தவிக்கும் தவிப்பை நன்றாக வெளிப்படுத்தி கவர்கிறார். செதுக்கிய உடம்பும் ஸ்டைலான முகமுமாக பிரசண்ணா பிய்த்து பிய்த்து உதறுகிறார். பேஸ் புக்கில் பல மாதங்கள் ஒரு பெண்ணை அமைதியாக கவனித்து வந்து தக்க நேரத்தில் காய் நகர்த்தி அவளை அனுபவிக்கும் குணாதிசயம் கொண்ட ஒரு கொடூரனை இயல்பான நடிப்பிலேயே கண் முன் நிறுத்தியதால் உச்சத்தை தொடுகிறார். கவனிக்கும்படியான நடிப்பை தந்திருக்கும் மற்றோரு நடிகர் ஐஜியாக வரும் முத்துராமன். இயக்குனர் சுசி கணேசன் சம்பந்தமில்லாத ஒரு டிடெக்ட்டிவ் வேடத்தில் வந்து நம்மையும் கதையோட்டத்தையும் காலி செய்கிறார்.

படத்தின் முதல் பாதி முழுக்கவே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சீட்டின் நுனியிலேயே பார்வையாளர்களை வைக்கிறது திருட்டு பயலே ௨. போலீஸின் தொலைபேசி ஒட்டுக்கேட்கும் முறையை சித்தரித்த விதம் பேஸ் புக் மற்றும் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி காமுகர்கள் குடும்ப பெண்களை எப்படி நீண்ட நாட்கள் திட்டம் போட்டு சாய்த்து சீரழிகிறார்கள் என்பதை விலாவரியாக சொன்ன விதம் பாபி எப்படி நேர்மையாக இருந்து நேரெதிராக மாறுகிறார் என்பதை காட்டும் காட்சிகள் என முத்திரை பாதிக்கும் இடங்கள் படத்தில் உண்டு. சிக்கலில் மாட்டியிருக்கும் மனைவியை முதலில் கோபம் சந்தேகம் பட்டாலும் பிறகு அவளை காயப்படுத்தாமலே அதிலிருந்து மீட்க பாபி செய்யும் காரியங்கள் சமுதாயத்துக்கு சொல்லும் நல்ல மெசேஜ். "ஒட்டு கேட்க ஆரம்பிச்ச பிறகு என்ன சுத்தியிருக்கிற யாரையுமே நம்ப முடியல என்று பாபி நண்பர்களிடம் சொல்லுவது பிரசன்னா உன்னுடைய பலம் பூட்ஸ் கால் என்னுடைய பலம் கீ பேட் போன்ற நல்ல வசனங்கள் படத்துக்கு பலம். இடைவேளை புள்ளியில் பாபி சிமாவிடமிருந்து ஆளுமை பிரசன்னாவிடம் மாறும் இடம் சிறந்த ஒரு டைரக்டர் டச்.

குறைகள் என்று பார்த்தல் படத்தின் முதல் பாதியில் காண்பித்த ஒரு எதிர்பார்ப்பை முற்றிலும் அதன் பிறகு தவிடு பொடியாக்கியது மற்றும் வேகமாக செல்ல கூடிய ஒரு திரைக்கதை களத்தை வேண்டுமென்றே நின்று நிதானித்து சொன்ன விதம். பாபி மற்றும் பிரசன்னாவுக்குமிடையேயான ஆடு புலி ஆட்டத்தை ஆழமாக சொல்லாமல் மேம்போக்காக விட்டு விட்டதில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பெரும் பணக்கார காமுகனான பிரசண்ணா பல பெண்களுடன் உறவு வைத்திருப்பவர் ஒரு பெண்ணுக்காக காரணமே இல்லாமல் எடுக்கும் ரிஸ்க் வெளிநாடு வரை பறந்து சென்று செய்யும் கற்பழிப்பு முயற்சி நம்பும்படியாக இல்லையென்பது மட்டுமில்லாமல் அந்த வலுவான கதாபாத்திரத்தையே சிதைத்து விடுகிறது. அமலா பாலின் பாத்திர படைப்பிலும் சமரசம் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது அவரை தப்பு செய்யாத நல்லவராக காட்டியது திரைக்கதைக்கு பாதகம்த்தானே தவிர உதவவில்லை. பிரசன்னாவை பழி வாங்கும் விதம் படு அமெச்சூர்தனம். அமலா பாலின் தம்பி வரும் காட்சிகள் மற்றும் சுசி கணேசனின் டிடெக்ட்டிவ் சேஷ்டைகள் மற்றும் அந்த கடைசி வெளிநாட்டு பகுதி முழுவதுமே திரைக்கதைக்கு முட்டு கட்டை தான்.

ஏ ஜி எஸ் நிறுவனம் அதிக பொருட்ச்செலவை அள்ளி  தெளித்தது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.  ஒளிப்பதிவாளர் செல்லத்துரை மற்றும் எடிட்டர் ராஜா முகமது ஆகியோர் பணி சிறப்பு. வித்யாசாகரின் பாடல்கள் பழைய நெடி அதிகம் என்றாலும் கேட்கும்படியாக இருக்கின்றன. பின்னணி இசையும் ஓகே ரகம்.  சுசி கணேசன் எழுத்து இயக்கத்தில் பதற வைக்கும் வலைதள காமுக வில்லன்கள் மற்றும் போலீஸ் ஒட்டு கேட்பு அரசியல் ஆகியவற்றை தோலுரித்து காட்டிய விதம் பாராட்டுக்குரியது. அதே சமயம் இன்னும் சிறப்பாக வந்திருக்க வேண்டிய படம் என்பதிலும் சந்தேகம் இல்லை.

பாபி,  பிரசன்னா மற்றும் அமலா பால் நடிப்பு மற்றும் இன்றைய சூழலில் தேவையான அனைவரையும் பாதிக்க கூடிய ஒரு அபாயத்தை அலசும் இந்த திருட்டு பயலே 2 வை தாராளமாக பார்க்கலாம்.

Rating : 2.8 / 5.0