close
Choose your channels

உதயநிதி-மாரி செல்வராஜ் படத்தில் இணையும் பிரபல நடிகர்!

Wednesday, March 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகர் ஒருவரை இணைய உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

‘பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ் அதன்பின்னர் தனுஷ் நடித்த ’கர்ணன்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த நிலையில் துருவ் நடிக்கவிருக்கும் படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது உதயநிதி நடிக்கும் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் பக்த பாசில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் உதயநிதியுடன் பகத் பாசில் மற்றும் மாரி செல்வராஜ் சந்திப்பு நடந்ததாகவும் இந்த சந்திப்பு முடிந்ததும் மூவரும் தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியதாகவும் புகைப்பட செய்திகள் வெளியாகி உள்ளன. எனவே உதயநிதி - மாரிசெல்வராஜ் படத்தில் பகத் பாசில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.