நியூசிலாந்து சாம்பியன் என பல மாதங்களுக்கு முன்னரே கணித்த ஜோதிடர்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய அரையிறுதியில் இந்தியா தான் வெற்றி பெறும் என பல கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்திருந்தாலும், நியூசிலாந்து அணி வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தியது.

இந்த நிலையில் பல மாதங்களுக்கு முன்னரே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஜோதிடர் ஒருவர் உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியாவும் நியூசிலாந்தும், அல்லது இந்தியாவும் இங்கிலாந்தும் மோத வாய்ப்பு உள்ளதாகவும், இதில் நியூசிலாந்து வெற்றி பெறும் என்றும் கூறினார். மேலும் இந்த ஆண்டு உலகக்கோப்பையை நியூசிலாந்து தான் வெல்லும் என்றும் கே.எம்.வில்லியம்ஸ் தொடர் நாயகன் விருதினை பெறுவார் என்றும் கூறியுள்ளார். இவர் கூறியதுபோலவே இந்தியாவை நியூசிலாந்து தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த மக்களவை தேர்தலில் பாஜக மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமர் ஆவார் என்று அதே நிகழ்ச்சியில் இதே ஜோதிடர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

More News

சரத்குமார்-சசிகுமார் படத்தின் டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடித்த 'நாடோடிகள் 2' மற்றும் 'கென்னடி கிளப்' ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில்

நயன்தாராவை அடுத்து அஞ்சலியுடன் ரொமான்ஸ் செய்யும் யோகிபாபு!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் ஒரு ஜாலியான கேரக்டரில் யோகிபாபு நடித்திருப்பார்.

நான் விளையாடியிருந்தால் இந்தியா ஜெயித்திருக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைந்து இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

அஜித்துடன் 3வது படம் உண்மையா? போனிகபூர் விளக்கம்

அஜித் நடித்து முடித்துள்ள 'நேர் கொண்ட பார்வை' மற்றும் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கவுள்ள மற்றொரு ஆக்சன் படம் இரண்டு படங்களையும் போனிகபூர் தயாரிக்கின்றார் என்பது தெரிந்ததே.

காப்பான் படத்தில் சூர்யா வில்லனா?

சூர்யா நடித்து வரும் 'காப்பான்; திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது டப்பிங், சிஜி பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.