close
Choose your channels

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பதில் இவரா? விதி மாற்றப்படுகிறதா?

Sunday, January 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்.

சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், நிரூப், வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ், ஜூலி, ஸ்ருதி, சுஜா வருனே, அனிதா சம்பத், தாமரை, ஷாரிக், தாடி பாலாஜி, சினேகன் மற்றும் அபிராமி ஆகிய 14 போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்த நடிகை ஓவியா திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவருக்கு பதிலாக ஒரு பிரபலம் கலந்துகொள்வார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஓவியாவுக்கு பதிலாக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் கலந்துகொள்ளப் போவதாக கூறப்படுகிறது. ஒருபக்கம் வனிதா, தாமரை, ஜூலி உள்பட அதிரடி போட்டியாளர்களுக்கு மத்தியில் காமெடியன் புகழ் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது முத்திரையை பதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் புகழ் கலந்து கொள்வதற்காக விதி மாற்றப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் புகழ் கலந்து கொள்கிறாரா? என்பது இன்று மாலைதான் உறுதியாக தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment