close
Choose your channels

இது அடல்ட்ஸ் ஒன்லி ஷோ அல்ல: விஜிக்கு ஞாபகப்படுத்திய கமல்

Sunday, September 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரம் வந்துவிட்டதை அடுத்து பிக்பாஸ் ஒரு இன்ப அதிர்ச்சியாக இறுதி போட்டிக்கு தேர்வானவர்களை அவர்களுடைய குடும்பத்தினர்களூடன் தொலைபேசியில் பேசும் வாய்ப்பை வழங்கினார்.

ரித்விகா தன்னுடைய அம்மாவிடம் பேசியபோது, 'தன்னுடைய மீன் தொட்டியில் இருக்கும் நான்கு மீன்களின் நலன் குறித்து விசாரித்தார். அதேபோல் விஜயலட்சுமி தனது கணவருடன் பேசியபோது தொலைபேசியேலே முத்தங்களை பரிமாற, உடனே சென்சார் செய்த கமல், இது ஒரு 'யூஏ' ஷோ என்பதை ஞாபகப்படுத்தினார்.

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பாலாஜி வெளியேற்றப்பட்டார். நேற்றைய நிகழ்ச்சிக்கு வந்த நித்யா, குழந்தைக்காக தனது கணவரை ஏற்றுக்கொள்வதாகவும் இருப்பினும் இன்னும் ஒரு 100 நாள் அவர் குடிக்காமல் கோபப்படாமல் இருக்க வேண்டும் என்றும் கூறினார். எனவே பாலாஜியை பொருத்தவரை இன்று முதல் இன்னொரு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.