இதுதான் கேபியின் வேற லெவல் ஸ்டாட்டர்ஜியா? வியக்கும் நெட்டிசன்கள்!

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்களும் அதன்பின் வைல்ட்கார்டில் இரண்டு போட்டியாளர்கள் இருந்தனர் என்பதும் அதில் ஒருவர் விஜய் டிவிக்கு நெருக்கமான கேபியும் ஒருவர் என்பதும் தெரிந்ததே.

ஆரம்பத்தில் கேபி மிக்சர் சாப்பிடும் பட்டியலில் இருந்தார் என்பதும் அதன் பின்னர் பாலா மற்றும் ஆஜித் உடன் நெருக்கமாக இருந்தார் என்பதும் அதன்பின்னர் பாலா, ஷிவானியுடன் நெருக்கமானதாலும், அர்ச்சனாவின் அன்பு குரூப்பில் ஆட்கள் அதிகம் இருப்பதை பார்த்து அந்த குரூப்பில் அவர் தன்னை இணைத்துக்கொண்டார்.

இதனை அடுத்து கேபி, அன்பு குரூப்பின் பாதுகாப்பால் நாமினேட் செய்யப்படவில்லை என்பதும் ஒருசில முறை நாமினேட் செய்யப்பட்டாலும் தப்பித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அர்ச்சனாவின் அன்பு குரூப் சுக்குநூறாக உடைந்து விட்ட போதிலும் ரியோ மற்றும் சோம் ஆகிய இருவருக்கும் நெருக்கமாக இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஹவுஸ்மேட்ஸ்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்தபோது ஆரிக்கு வெளியில் மிகப்பெரிய ஆதரவு இருப்பதை புரிந்து கொண்டார். அதனால் அவர் ஆரிக்கு ஆதரவாக நிலையையே கடந்த சில நாட்களாக எடுத்து, அவருடைய ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சமீபத்தில் கூட ரம்யாவை அவர் நாமினேட் செய்தபோது, ரம்யா எடுக்கும் பெரும்பாலான முடிவுகள் ஆரிக்கு எதிராக இருக்கும் என்றும் அவர் கூறியது ஆரியின் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. அதேபோல் கிச்சன் விவகாரத்தில் ஆரி குறித்து பாலாஜி ஒரு விஷயத்தை கூற வரும் போது ’இதை ஏன் என்னிடம் சொல்கிறாய்’ என்று ஆரிக்கு முன்னாலேயே பாலாஜிக்கு பல்பு கொடுத்ததும் ஆரியின் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தது.

கடந்த பல வாரங்களாக அன்பு குரூப்பால் காப்பாற்றப்பட்ட கேபி, தற்போதைக்கு நிலையில் ஆரிக்கு ஆதரவான நிலையை எடுத்தால் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் நீடித்திருக்க முடியும் என்பதை புரிந்து கொண்டு அதன்படி அவர் விளையாடி வருவது அவருடைய வேற லெவல் ஸ்டாட்டர்ஜி என்று நெட்டிசன்கள் வியந்து வருகின்றனர்.

இன்னும் 10 நாட்கள் கேபி இதே போன்று ஆரிக்கு ஆதரவான நிலையை எடுத்து விளையாடினால் அவர் டைட்டில் வெல்கிறாரோ இல்லையோ? இறுதிப் போட்டியில் பங்கு பெறும் நான்கு பேர்களில் ஒருவராக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

More News

பெண்மைக்கே விலை பேசுவதா? நடிகர் கமல்ஹாசனை வம்பிற்கு இழுக்கும் பிரபல நடிகை!!! வைரலாகும் விவாதம்…

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியை தொடங்கியதில் இருந்தே பெண்கள் மேம்பாடு குறித்த கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

டிக்கெட் டு ஃபினாலே இவருக்குத்தானா? மீண்டும் ஆரிக்கு ஏமாற்றம்!

பிக்பாஸ் வீட்டில் தற்போது ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக நடந்த நான்கு சுற்று போட்டிகளில் ரம்யா 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்

குடிமகன்களுக்கு வந்த புது சோதனை…  டாஸ்மாக்குக்கு 3 நாள் லீவா??? களைக்கட்டும் மீம்ஸ்!!!

ஒரே ஒரு நாள் டாஸ்மாக்கு லீவு விட்டாலும் குடிமகன்களின் பாடு திண்டாட்டமாகிவிடும். இந்நிலையில் இந்த ஜனவரி மாதம் மட்டும் தமிழக டாஸ்மாக்குக்கு 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட இருக்கிறது

சிம்புவின் 'பத்து தல' படத்தில் இணைந்த 'அசுரன்' நடிகர்!

சிம்புவின் அடுத்த படத்தின் டைட்டில் 'பத்து தல' என்றும் இந்தப் படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான 'முஃப்தி' என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பதும் தெரிந்ததே.

கமல்ஹாசன் படத்தை கடுமையாக விமர்சனம் செய்த ஒரே ஒரு படம் இயக்கிய மாரி செல்வராஜ்!

கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' படத்தில் உள்ள குறையை நிகழ்ச்சி ஒன்றில் 'பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது