இதுதான் இன்றைய மிகச்சிறந்த படம்: கமல்ஹாசன் பெருமிதம்

  • IndiaGlitz, [Wednesday,August 16 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்றைய சுதந்திர தினத்தில் அரசியல் குறித்த சில பதிவுகளை தெரிவித்திருந்தாலும், சுதந்திர தினம் குறித்தும் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள துப்ரி மாவட்டத்தில் நோஸ்கரா என்ற பகுதி கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பல இடங்களில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ள நிலையில் அந்த பகுதியின் பள்ளியில் உள்ள ஒரு ஆசிரியர் இடுப்ளவு உள்ள தண்ணீரில் நின்று கொண்டு தேசியக்கொடி ஏற்றி சல்யூட் அடித்து சுதந்திர தினத்தை கொண்டாடினார்.

இதுகுறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள கமல்ஹாசன், இதுதான் இன்றையை மிகச்சிறந்த புகைப்படம். இது நம் நாட்டின் நம்பிக்கையின் ஒரு எடுத்துக்காட்டு. அரசியல்வாதிகள் இதுவரை தோல்வி அடைந்துள்ள நிலையில் அவர்கள் இனிமேலாவது சேவை செய்ய வேண்டும் அல்லது பணிநீக்கம் செய்யப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

முதல்முறையாக முதல்வரின் ராஜினாமா குறித்து பேசிய கமல்!

கடந்த சில மாதங்களாக உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளம் மூலம் அரசியல் கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்...

பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றாரா குத்தாட்ட நடிகை?

பிக்பாஸ் வீட்டில் இருந்து சக்தி வெளியேறவுள்ளார் என்பதை கடந்த சனிக்கிழமை அன்றே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்...

மணிரத்னம் பட நாயகியாகும் பிரபல நடிகரின் வாரிசு

'காற்று வெளியிடை' படத்திற்கு பின்னர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் நடிகர், நடிகைகளின் தேர்வுப்பணி நடைபெற்று வருகிறது...

'கரகாட்டக்காரன்' புகழ் சண்முகசுந்தரம் காலமானார்

பழம்பெரும் குணசித்திர நடிகர் சண்முகசுந்தரம் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த அவர் சிகிச்சையின் பலனின்றி காலமானார்...

விவசாயிகளை காப்பாற்றுங்கள்: ஜி.வி.பிரகாஷின் சுதந்திரதின செய்தி

இந்தியாவின் 71வது சுதந்திர தினம் இன்று நாடெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றியுள்ளனர்...