close
Choose your channels

நயன்தாராவை திருமணம் செய்ய விரும்பும் பிரபல நடிகர்

Monday, May 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தின் சிங்கிள் பாடலான 'எனக்கு கல்யாண ஆசை வந்துருச்சுடி' என்ற பாடலில் நடிகை நயன்தாராவிடம் காதலை தெரிவிக்கும் வகையில் யோகிபாபு நடித்த காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிரபல நடிகர் நட்டி நட்ராஜ், நயன்தாராவை திருமணம் செய்ய விரும்புவதாக டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அவர் தனது டுவிட்டரில், 'கட்ணா கோலமாவு கோகிலாவ கட்டணும்.. இல்ல கட்டிணவனுக்கு கை குடுக்கணும் என்று கூறி, நயன்தாராவை புரபோஸ் செய்த யோகிபாபுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நட்டி நட்ராஜின் இந்த டுவீட்டுக்கு டுவிட்டர் பயனாளிகள் 'நீங்களுமா? என்றும், ரொம்ப டீசண்ட்டா உங்கள் மனதில் இருந்ததை சொல்லிவிட்டீர்கள்' என்றும் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.