இந்த வாரம் 5 படங்கள் ரிலீஸ்: சினிமா ரசிகர்கள் செம குஷி

தமிழ் திரை உலகில் ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் 5 திரைப்படங்கள் வெளியாக இருப்பதால் சினிமா ரசிகர்களுக்கு குஷியாகி உள்ளது.

இந்த வாரம் ஜூலை 14ஆம் தேதி வியாழக்கிழமை லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவான ’தி வாரியர்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் டீசர் ஆகியவை ஏற்கனவே மிகப்பெரிய அளவில் வைரலாகி உள்ளதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது என்பதும் இது ஒரு அதிரடி ஆக்ஷன் கமர்சியல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஜூலை 15ம் தேதி பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ வெளியாக உள்ளது. உலகிலேயே முதல் முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நான்லீனியர் படமான இந்த படத்தை ஏற்கனவே பிரபலங்கள் பார்த்து பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளனர். மேலும் இன்று காலை இந்த படத்தின் 30 நிமிட காட்சிகள் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டட்து என்பதும், இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் பத்திரிகையாளர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக சாய் பல்லவி நடித்த கார்கி’ என்ற திரைப்படம் ஜூலை 15ஆம் வெளியாக உள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீஸர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிரபுதேவா நடித்த ’மை டியர் பூதம்’ என்ற திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாக உள்ளது. குழந்தைகளுக்கு பிடிக்கும் கதையம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் குடும்பத்தோடு பார்க்கும் ஒரு ஃபேண்டசி படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸி நடித்த திரைப்படம் ’சபாஷ் மித்து’ திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இந்த படம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜூலை 22ஆம் தேதி அருள்நிதியின் ‘தேஜாவு’ ஜூலை 28ஆம் தேதி அருள் சரவணன் நடித்த ’தி லெஜண்ட்’ ஆகிய படங்களும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திரையரங்கில் சூப்பர்ஹிட்டான 'வீட்ல விசேஷம்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜீ 5 தளம், இந்த ஆண்டின் மிகவும் கொண்டாடப்பட்ட தமிழ் குடும்ப பொழுதுபோக்கு படமான 'வீட்ல விசேஷம்' படத்தை, ஜூலை 15, 2022 முதல், உலகம் முழுக்க திரையிடுகிறது !!

பாலாவின் 'அவன் இவன்' பட நடிகர் காலமானார்; திரையுலகினர் இரங்கல்

இயக்குனர் பாலா இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவான திரைப்படம் 'அவன் இவன்'. கடந்த 2011ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்

நயன்தாராவின் 75வது படத்தில் யார் யார் இருக்காங்க தெரியுமா? சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் விபரங்களை தற்போது பார்ப்போம்.

'தி லெஜண்ட்' படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம்!

பிரபல தொழிலதிபர் அருள் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

'உறியடி' விஜயகுமாரின் அடுத்த படம்: இயக்குனர் இவர் தான்!

உறியடி விஜய் குமார் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.  இப்படத்தை சேத்துமான் புகழ் தமிழ் இயக்குகிறார்.