close
Choose your channels

இந்த வாரம் வெளியாகும் நான்கு திரைப்படங்கள்: ஒரு பார்வை

Sunday, September 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் கோலிவுட் திரையுலகில் குறைந்தது நான்கு திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரம் அதாவது செப்டம்பர் 6ஆம் தேதி வெள்ளியன்று நான்கு திரைப்படங்கள் வெளியாகின்றது. அவை 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'சிவப்பு மஞ்சள் பச்சை', 'மகாமுனி' மற்றும் 'ஜாம்பி.

எனை நோக்கி பாயும் தோட்டா: தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிய இந்த படம் நீண்ட நாள் காலதாமதமாக வெளிவருகிறது. இருப்பினும் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் ஆகியவை ஏற்கனவே ஹிட்டாகிவிட்டதாலும் தனுஷ்-கவுதம் மேனன் காம்பினேஷனில் முதல் படம் என்பதாலும் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் - சித்தார்த் நடித்த 'சிவப்பு மஞ்சள் பச்சை: 'பிச்சைக்காரன்' என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் சசி இயக்கியிருக்கும் அடுத்த படம் தான் இது. ஜிவி பிரகாஷ் மோட்டார் ரேஸ் இளைஞராகவும் சித்தார்த் டிராபிக் காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளனர். சென்னையில் சட்டவிரோதமாக பைக்ரேஸில் ஈடுபடும் இளைஞர்களால் ஏற்படும் விபரீதங்கள் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படம் இயக்குனருக்காக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்யாவின் 'மகாமுனி': ஆர்யா நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளிவந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'மெளனகுரு' என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படம் என்பதும் எதிர்பார்ப்பிற்கு இன்னொரு காரணம்

ஜாம்பி: நகைச்சுவை மற்றும் த்ரில கலந்த இந்த படம் யோகிபாபு மற்றும் யாஷிகாவிற்காகவே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேம்ஜி அமரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவியின் 'மிருதன்' படத்தை அடுத்து தமிழில் வெளிவரும் ஜாம்பி படம் தான் இந்த 'ஜாம்பி'.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.