இந்த வாரம் ஓடிடியில் எத்தனை தமிழ்ப்படங்கள்.. முழு விவரங்கள்..!

  • IndiaGlitz, [Saturday,February 03 2024]

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே ரிலீசான திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் குறித்த தகவல்களை பார்ப்போம்.

இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக ஒரே ஒரு தமிழ் படம் மட்டும் ரிலீஸ் ஆகியுள்ளது. இருப்பினும் அந்த படம் ஒரு அசத்தலான படம் என்பதால் ரசிகர்களுக்கு திருப்தியாக இருக்கும், அந்த படம் தான் சமீபத்தில் திரையரங்குகளில் லேசாகி நல்ல வரவேற்பு பெற்ற ’மதிமாறன்’ என்ற திரைப்படம்

வெங்கட் செங்குட்டுவன், இவானா, ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன், பவா செல்லத்துரை உள்பட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படத்தை மந்த்ரா வீரபாண்டியன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது.

மேலும் பிரைம் ஓடிடியில் ’சைந்தவ்’ என்ற தெலுங்கு படம், ’காரடி’ என்ற கன்னட திரைப்படம், ஹாட் ஸ்டார் ஓடிடியில் ’மிஸ் பெர்பெக்ட்’ என்ற தெலுங்கு திரைப்படம் வெளியாகி உள்ளது

அதேபோல் மனோரமா மேக்ஸ் என்ற ஓடிடியில் 'ஓ மை டார்லிங்’ என்ற மலையாள படமும் இந்த வாரம் வெளியாகி உள்ளது. மேலும் ‘பிண்டம்’ என்ற தெலுங்கு படம் ஆகா ஓடிடியில் வெளியாகி உள்ளது.

More News

நடிகர் விஜய்யின் புதிய கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக அரசியல்வாதியின் மனைவி..!

நடிகர் விஜய் நேற்று தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் அரசியல் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

'D50' படத்தில் தனுஷ் கேரக்டர் பெயர் இதுவா? செம்ம மாஸாக இருக்கும் போல் தெரிகிறதே...!

தனுஷ் நடித்து இயக்கியுள்ள 'D50' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது வேணாம் விஜய் சார்.. எம்ஜிஆர் போல் செயல்படுங்கள்: இயக்குனர் பேரரசு அறிவுரை..!

தளபதி விஜய் நேற்று தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்களும் விமர்சனங்களும் மாறி மாறி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

மகாலட்சுமி காயத்ரி மந்திரம் - வெள்ளிக்கிழமை உச்சரிக்க வேண்டிய அற்புத மந்திரம்!

மகாலட்சுமி காயத்ரி மந்திரம் - வெள்ளிக்கிழமை உச்சரிக்க வேண்டிய அற்புத மந்திரம்!

“மெட்ராஸ்காரன்”  திரைப்படத்தில் ஷேன் நிகாம்  ஜோடியாக இணைந்த தெலுங்கு நாயகி!!

எஸ்.ஆர் புரடொக்சன்ஸ் சார்பில் பி.ஜகதீஷ்  தயாரிப்பில், ரங்கோலி படப்புகழ் இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன் இணைந்து நடிக்க, புதுமையான