close
Choose your channels

'காபி வித் காதல்' உள்பட இன்று வெளியாகியுள்ள ஓடிடி ரிலீஸ் படங்கள்!

Friday, December 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் நான்கு முதல் ஆறு திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதே அளவு கிட்டத்தட்ட ஓடிடி வடிவிலும் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடியிலும் வெளியாகி வருவதால் ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு மிகப்பெரிய அளவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று அதாவது டிசம்பர் 9ஆம் தேதி ஓடிடியில் வெளியாகியுள்ள தமிழ் தெலுங்கு மற்றும் பிறமொழி படங்கள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்

சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் உள்பட பலர் நடித்த ரொமான்ஸ் காமெடி திரைப்படமான ’காபி வித் காதல்’ திரைப்படம் இன்று ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது. அதேபோல் கண்ணா ரவி, ரோஹினி, ஷ்ரதா ஸ்ரீநாத் நடிப்பில் உருவான விறுவிறுப்பான ’விட்னஸ்’ என்ற படம் சோனிலைவ் ஓடிடியில் வெளியாகிறது. மேலும் அஞ்சலி நடித்த ‘ஃபால்’ என்ற வெப்தொடரும் இன்று வெளியாகிறது.

மேலும் ‘ஊர்வசிவோ ராஷிக்காவோ’, ‘லைக்ஸ் ஷேர் சப்ஸ்கிரை’, ‘மஞ்சரிலா நியோஜார்க்காவா’, ஆகிய தெலுங்கு படங்களும், ’மன்சூன் ரங்கா’ என்ற கன்னட திரைப்படமும் ‘பிளர்’, ‘டாக்டர் ஜி’, ‘ஃபாடு’, ‘கேட்’ ஆகிய இந்தி திரைப்படங்களும் இன்று ஓடிடியில் வெளியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.