சமுத்திரக்கனியின் 'தொண்டன்': திரைமுன்னோட்டம்

  • IndiaGlitz, [Sunday,May 21 2017]

கோலிவுட் திரையுலகில் பொழுதுபோக்கிற்கு மட்டுமின்றி சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துகளுடன் கூடிய திரைப்படங்கள் உருவாக்கும் ஒருசில இயக்குனர்களில் சமுத்திரக்கனியும் ஒருவர். அவர் இயக்கி நடித்த 'அப்பா' திரைப்படம் ஒவ்வொரு பெற்றோர்களும் பார்க்க வேண்டிய மிக அற்புதமான படைப்பு. இந்த நிலையில் சமுத்திரக்கனியின் அடுத்த படமான 'தொண்டன்' வரும் வெள்ளி அன்று வெளியாகவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை தற்போது பார்ப்போம்.

இந்த படத்தின் தலைப்பை வைத்து அனைவரும் இது ஒரு அரசியல் படமாக இருக்குமோ என்று எண்ண தோன்றும். ஆனால் இது அரசியல் படம் இல்லை என்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சமுத்திரக்கனி தெளிவுபடுத்தியுள்ளார். அவர் அந்த விழாவில் கூறியதாவது: 'தொண்டன் என பெயர் வைத்திருப்பதால் இது அரசியல் படமா என கேட்கிறார்கள்.. நிச்சயமாக இல்லை.. பக்கத்தில் இருக்கும் ஒருவருக்கு பிரச்சனை என்றால் அவருக்கு வலிய சென்று உதவி செய்கிறானே, அவன் தான் தொண்டன்.. அப்படி நம் சமூகத்தில் உள்ள மனிதாபிமானம் கொண்ட மனிதர்களை பற்றி பேசும் படம் தான் இந்த தொண்டன் என கூறினார்..

இந்த படத்தில் சமுத்திரக்கனி ஆம்புலன்ஸ் டிரைவராக நடித்துள்ளார். ஆம்புலன்ஸ் டிரைவர்களின் உன்னதமான பணியை பற்றி அழகாக விளக்கியுள்ள இந்த படம் அவருடைய இயக்கத்தில் வெளியாகவுள்ள 11வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இயக்கிய படங்களில் இதுதான் பெஸ்ட் என சொல்லும் விதமாக இந்தப்படம் இருக்கும் என்று சமுத்திரக்கனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கரூரில் உள்ள கல்லூரி ஒன்றில் அப்பாவி மாணவி ஒருவருக்கு நிகழ்ந்த ஒரு கொடுமைதான் இந்த படத்தின் கரு. இருப்பினும் இந்த படத்தில் நிஜமும், கற்பனையும் கலந்த காட்சிகள் அடங்கியுள்ளதாக சமுத்திரக்கனி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சமுத்திரக்கனி, விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தின் நாயகி சுனைனா. சுனைனாவுக்கு இந்த படம் திருப்புமுனையை ஏற்படுத்தி கோலிவுட்டில் மீண்டும் ஒரு சுற்று வர இந்த படம் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறாது.

மேலும் இந்த படத்தில் சூரி, தம்பி ராமையா, கஞ்சா கருப்பு உள்பட நகைச்சுவை நடிகர்களின் பட்டாளம் இருப்பதால் காமெடிக்கும் பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது

'ஆரஞ்சு மிட்டாய்', 'ஒருநாள் கூத்து' ,உள்குத்து' போன்ற படங்களுக்கு இசையமைத்த வளரும் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலரின் பின்னணி இசையில் இருந்தே இவர் தனது அதிகபட்ச உழைப்பை இந்த படத்திற்காக கொட்டியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மதுரை மண்ணை சேர்ந்த இவர் சென்னை தரமணியில் சவுண்ட் இன்ஜினியரிங் முடித்து, பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராக ஒருசில வருடங்கள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது

ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில், ஏ.எல்.ரமேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வசுந்தராதேவி சினிபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சர்டிபிகேட் வழங்கியதோடு, அனைவரும் பார்க்க வேண்டிய படம் என படக்குழுவினர்களை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.

'பாகுபலி 2' பரபரப்பு குறைந்துள்ள இந்த சரியான நேரத்தில் ரிலீஸ் ஆகும் இந்த படம் 'அப்பா' படத்தை போல அனைவரையும் ஆதரவையும் பெற்று சமுத்திரக்கனிக்கு மேலும் ஒரு வெற்றிக்கனியை பெற்றுத்தருமா? என்பதை வரும் வெள்ளி அன்று திரைவிமர்சனத்தில் பார்ப்போம்.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஆதரவாக குரல் எழுப்பிய ஜீவா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய அரசியல் வருகை குறித்த பேச்சுக்கு கடந்த சில நாட்களாக பல்வேறு தலைவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்...

தமிழக முதல்வர் கலந்து கொண்ட முதல் ஆடியோ ரிலீஸ் விழா

தமிழக முதல்வர் எடப்பாடி பழநிச்சாமி முதன்முதலாக ஒரு திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டதோடு, அந்த படத்தின் ஹீரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த படம் 'வைரமகன்', படத்தின் ஹீரோ கோபிகாந்தி...

'பாகுபலி' வெற்றியை தொடர்ந்து டிரண்ட் ஆகும் சரித்திர படங்கள்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களின் வெற்றியை தொடர்ந்து தென்னிந்திய திரையுலகில் குறிப்பாக கோலிவுட்டில் மீண்டும் சரித்திர படங்களின் டிரெண்ட் ஆரம்பித்துவிட்டதாகவே கருதப்படுகிறது...

சாட்டிலைட் உரிமை: தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி முடிவு

ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கு அவர் தயாரிக்கும் படத்தின் சாட்டிலைட் உரிமை வியாபாரம் என்பது மிகவும் முக்கியமானது. படத்தின் பட்ஜெட்டின் ஒரு பெரும் பகுதி சாட்டிலைட் உரிமையில் இருந்தே கிடைத்துவிடும்....

சினிமா என்றால் ரஜினி, கமல், ராஜமெளலி மட்டும் தானா? ஆர்.கே.செல்வமணி ஆவேசம்

மத்திய அரசு சமீபத்தில் திரையுலகிற்கும் ஜி.எஸ்.டி. வரி பொருந்தும் என அறிவித்துள்ளதால் திரையரங்குகளின் டிக்கெட் விலையின் மீது 28% வரிவிதிக்கப்படவுள்ளது. இந்த நடைமுறை வரும் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படவுள்ளது...