யாராலும் ரஜினி ஆக முடியாது: 'ரஜினி' படத்தில் நடிக்கும் ஹீரோ

ரஜினி ரசிகராக ‘ரஜினி’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட படத்தில் நடித்து வரும் ஹீரோ ஒருவர், ‘யாராலும் இனி ரஜினி ஆக முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மகாராஜா, நெல்லு ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த விஜய் சத்யா ‘ரஜினி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தில் ரஜினி ரசிகராக நடித்து வருகிறார். ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நாயகிகளாக ஷெரின் மற்றும் சம்யுக்தா நடித்து வருகின்றனர் என்றும் மேலும் புகழ், பாலா பல உள்பட பலரும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த படத்தில் ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடித்துள்ளதாகவும், ரஜினி பட வசனங்களை ஒரு சில இடங்களில் பேசினாலும் ரஜினி மாதிரி நடிக்க முயற்சிக்க வில்லை என்றும் ஏனெனில் ரஜினி போல் யாராலும் நடிக்க முடியாது என்றும் விஜய் சத்யா கூறியுள்ளார் .

இந்த படம் தன்னுடைய முந்தைய படங்களை விட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் இயக்குனர் கூறியதை அப்படியே ஏற்றுக்கொண்டு இந்த படத்தில் நடித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

மேலும் இந்த படத்திற்கு ரஜினிகாந்த் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார் என்றும் எனது கேரக்டர் குறித்தும் அவர் கேட்டறிந்தார் என்றும் பேட்டி ஒன்றில் விஜய் சத்யா கூறியுள்ளார்.

More News

ஐஸ்வர்யா ரஜினி அவ்வளவு சீக்கிரம் ஒப்புக்கொள்ள மாட்டாங்க: பிரபுதேவாவின் வைரல் வீடியோ

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவ்வளவு சீக்கிரம் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என பிரபல நடிகர், இயக்குனர் பிரபு தேவாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் மணிரத்னம் பட ஹீரோ-ஹீரோயின்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  'குக் வித் கோமாளி நிகழ்ச்சி இரண்டு சீசன்கள் முடிவடைந்து தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது என்பது தெரிந்ததே.

முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் காமெடி நடிகர்: குவியும் வாழ்த்துக்கள்!

எம்ஜிஆர், என்டிஆர் உள்பட ஹீரோக்கள் அரசியலில் களமிறங்கி முதலமைச்சராக பதவி ஏற்று உள்ளார்கள் என்பதை பார்த்து வருகிறோம். ஆனால் ஒரு காமெடி நடிகர் பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி

திருமண விவகாரம்: சிம்புவை வம்புக்கிழுத்த பிரேம்ஜி அமரன்!

இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து எனக்கும் சிம்புவுக்கும் தவிர மற்ற எல்லாருக்கும் திருமணம் ஆகியிருக்கும் என்று நகைச்சுவையாக பிரேம்ஜி போட்ட டுவிட் சிம்பு ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

உக்ரைன் குழந்தைகளுக்காக மனம் இறங்கிய அமெரிக்க வீரர்… நெகிழ்ச்சி தகவல்!

அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டுள்ள