சென்னையைச் சேர்ந்த மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ்: அதிர்ச்சி தகவல் 

தமிழகத்தில் ஏற்கனவே 15 பேர் கொரோனா வைரசால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மதுரையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

நியூசிலாந்தில் இருந்து சென்னைக்கு திரும்பிய 65 வயது நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு அவர் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு தற்போது அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

இதேபோல் லண்டனிலிருந்து இந்தியாவுக்கு திரும்பிய 25 வயது இளம்பெண் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் அவர்களது உடல்நிலை அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசால் சென்னையை சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

கொரோனா; அடுத்த 3 மாதங்களுக்கு ATMகளில் சேவைக்கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்!!!

கொரோனா பரவலைத் தடுக்க அடுத்த 21 நாளுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அமல்படுத்தி உத்தரவிட்டார்.

கொரோனா வைரஸ்: தமிழகத்தில் முதல் பலி

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மதுரையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரம் மோசமானாலும் பரவாயில்லை, எனக்கு மக்கள் தான் முக்கியம்: பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதரம் மிக மோசமாக பாதிப்பு அடைந்தாலும் எனக்கு கவலையில்லை. எனக்கு என் நாட்டு மக்களின் உயிர்தான் முக்கியம் என்று பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்குடன் பேசியுள்ளது

கொரோனா வைரஸ் எதிரொலி: ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு

உலகமெங்கும் மிக வேகமாக பரவும் கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒத்திவைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி அடுத்த ஆண்டு நடத்த

நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு: பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் சற்றுமுன் உரையாற்றிய பிரதமர் மோடி, 'இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்