'விக்ரம்' படத்தில் விஜய்சேதுபதிக்கு 3 ஹீரோயின்களா? யார் யார்?

  • IndiaGlitz, [Thursday,December 16 2021]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ’விக்ரம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடித்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதியும் மற்றொரு முக்கிய கேரக்டரில் பகத்பாசில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி ஜோடியாக பிக்பாஸ் ஷிவானி நாராயணன் நடித்து வருகிறார் என்றும், அதே போல் விஜய் டிவி பிரபலம் மைனா நடித்து வருகிறார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது மகேஸ்வரி என்ற நடிகையும் நடித்து வருவதாகவும், ஆக மொத்தம் விஜய் சேதுபதிக்கு இந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் பணிபுரிந்து வருகிறார் என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'ஓ மை கோஸ்ட்' படத்தில் சன்னிலியோன் கேரக்டர் இதுதான்: இயக்குனர் தகவல்!

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் 'ஓ மை கோஸ்ட்' என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் சன்னி லியோன் சென்னை வந்து இருந்தார் என்பதையும் பார்த்தோம்

பிரியங்காவிடம் அக்சரா கூறியது என்ன? அதிர்ச்சி வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த போட்டியாளர்கள் கூட ஆவேசமாக மாறி வருவதை பார்த்து வருகிறோம். குறிப்பாக எந்நேரமும் புன்னகையுடன் பிக்பாஸ் வீட்டில் வலம் வந்து

பிக்பாஸ் வருணின் அம்மா இந்த பிரபலமா? 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான வருணின் அம்மா குறித்த தகவல் இணையத்தில் பரவி வருவது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ரூ.1 லட்சத்திற்கு விற்ற ஒரு கிலோ டீத்தூள்… அப்படியென்ன ஸ்பெஷல்?

அசாம் மாநிலத்தில் விளைந்த அரியவகை தேயிலை தூள் ஒரு கிலோ 99,999  ரூபாய்க்கு விற்பனை ஆகியிருக்கிறது. இதற்கு முன்பு 75

'போலீஸ் பத்தி அவதூறு கிளப்புறதுக்குன்னே ஒரு கூட்டம் இருக்கு': பா ரஞ்சித்தின் அடுத்த பட டிரைலர்!

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியிருக்கும் அடுத்த படமான 'ரைட்டர்' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் திலீபன்,