நடிகர் விமல் கொடுத்த புகார்… தயாரிப்பாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு!

  • IndiaGlitz, [Friday,August 27 2021]

“களவாணி“ படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்த நடிகர் விமல் தன்னிடம் பணமோசடியில் ஈடுபட்டதாக சினிமா தயாரிப்பாளர் உட்பட மற்ற 2 பேர் மீது புகார் அளித்துள்ளார்.

இயக்குநர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “மன்னர் வகையறா”. இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளின்போது பண நெருக்கடி ஏற்பட்டதாகவும் அதனால் இந்தப் படத்தை நடிகர் விமலின் தயாரிப்பு நிறுவனமான A3V நிறுவனமே தயாரிப்பு பணிகளை ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்தப் படத்திற்கு பைனான்ஸ் ஏற்பாடு செய்துகொடுத்த தயாரிப்பாளர் சிங்காரவேலன், கோபி மற்றும் விக்னேஷ் எனும் இருவருடன் இணைந்து கொண்டு நடிகர் விமலிடம் பொய்க்கணக்கு கூறியதாக புகார் அளித்துள்ளார். முதலில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது புகார் அளித்தபோது அந்த புகார் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதையடுத்து நடிகர் விமல் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இதையடுத்து அவரது புகாரை ஏற்றுக்கொள்ளும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் அரேபியன் பாடலா?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது தெரிந்ததே.

ஹரி-அருண்விஜய் படத்திலிருந்து விலகிய பிரகாஷ்ராஜ்....! அந்த ரோலுக்கு பிரபல இயக்குனர்....?

அருண் விஜய்-க்கு அண்ணனாக நடிக்க, நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களை ஒப்பந்தம் செய்திருந்தனர்

சினிமாவில் அறிமுகமாகும் விஷால் பட நாயகியின் மகள்!

நடிகர் விஷால் நடித்த படத்தில் நாயகியாக நடித்த நடிகையின் மகள் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

முடிவுக்கு வந்தது ஷங்கர் பட பிரச்சனை: விரைவில் படப்பிடிப்பு

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் படம் ஒன்று நீண்டகாலமாக பிரச்சனையில் இருந்த நிலையில் தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முயற்சியால் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால்

ரூ.3 கோடி கடனுக்கு ரூ.4 கோடி வட்டி: விமல் புகாரால் தயாரிப்பாளர் மீது வழக்கு!

ரூபாய் மூன்று கோடி வாங்கிய கடனுக்காக நான்கு கோடி ரூபாய் வட்டி கட்டியதாக தன்னிடம் கூறி தன்னை ஏமாற்றியதாக தயாரிப்பாளர் மற்றும் இரண்டு பைனான்சியர்கள் மீது நடிகர் விமல் புகார்